சிம்பாப்வேக்கான ஐ.நா. தூதுவர் சிம்பாப்வே அரசிற்கும் எதிர்க் கட்சிகளுக்கும் இடையில் நேரடி பேச்சுவார்த்தைகள் நடத்தி அரசியல் சர்ச்சையை தீர்க்க வழிவகுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றுக்கு இருதரப்பினரும் ஒப்புக்கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிம்பாப்வேக்கான தூதுவர் ஹெய்ல் மென்கீரியோஸ் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தில் சிம்பாப்வே ஜனாதிபதி ரொபர்ட் முகாபேவும் எதிர்க் கட்சித் தலைவர் மோர்கன் ஸ்வாங்கிராயும் ஹராரேவில் கையொப்பமிடுவார்கள் என்றுதான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு பின்னர் நடைபெறும் பேச்சுவார்த்தைகள், சுதந்திரமான, முறைகேடுகள் அற்ற தேர்தல்கள் நடைபெறுவதற்கு ஏதுவான அரசியல் சூழ்நிலையை உருவாக்கும் என தான் நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.