Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, July 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மலையக சமூகம் கல்வியில் அபிவிருத்தி காண்கின்றபோதும் அரசறிவியல் கல்வியில் போதிய மாற்றங்கள் இல்லை
[23 - July - 2008] [Font Size - A - A - A]
* ஊவா மாகாண சபை உறுப்பினர் வேலாயுதம் தெரிவிப்பு

அரசியலும் அரசறிவியற் கருத்துகளும் வெகுவிரைவாக வளர்ந்து வரும் காலமிது. தொடர்புசாதனங்கள் வளர்ச்சியின் காரணமாக கருத்துப் பரிமாற்றங்களும் வேகமடைந்து ஆராய்ச்சி துறைகளும் அதற்கான கற்கைநெறிகளும் வளர்ச்சியடைந்தன. அந்த வகையில் எமது மலையக சூழலில் இன்னும் அதன் வளர்ச்சி மந்த கதியிலேயேயுள்ளது. மலையக சமூகம் கல்வி அபிவிருத்தியில் மாற்றம் கண்டு வருகின்ற போதிலும் அரசறிவியற் கல்வியில் போதிய மாற்றங்களைக் காண முடியவில்லையென்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் ஊவா மாகாண சபை உறுப்பினருமான கே.வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை பதுளை ஒனிக்ஸ் விடுதியில் பவர் நிறுவனம் பிரட்ரிக் ஈபர்ட் மன்றத்துடன் இணைந்து ஆரம்பித்துள்ள பெருந்தோட்டத்துறை இளம் தலைவர்களுக்கான 170 மணித்தியாலங்கள் உள்ளடக்கிய 4 மாத பதினாறு நாள் விசேட வதிவிட பயிற்சிநெறியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முகவரியற்ற எமது மலையக சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ள போதும் அரசறிவியற் துறையில் இளைஞர்களுக்கும் மக்களுக்கும் போதுமான அறிவில்லாத காரணமாக எமது சமூகத்தின் சகலதுறை வளர்ச்சிகளும் மந்த கதியிலேயே நகர்கின்றது.

எமக்கே உரித்தான சிவில் மற்றும் அரசறிவியற் முறைமைகளையும் வாக்குரிமையின் முக்கியத்துவத்தையும் உணராதவர்களாகவிருக்கின்றோம். சொற்ப சலுகைகளுக்காக எமது வாக்குகளை விலைக்கு வாங்குவோரிடம் அடகு வைக்கும் ஓர் சமூகமாக காணப்படுகின்றோம்.

எமது அடிப்படைத் தேவைகளையோ உரிமைகளையோ சமூக கட்டமைப்புகளின் பற்றாக்குறைகளையோ நாம் அறியாதவர்களாக அது அவ்வாறே குவிந்து கிடக்க வெறும் அரசறிவியற் பிரதிநிதித்துவத்தின் கீழ் வெறும் தங்கி வாழும் சமூகமாக இருந்து வருகின்றோம்.

ஏனெனில், தற்போது எமது அரசியல் பிரதிநிதித்துவம் எமது தேவைகளையும் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்வதை விடுத்து தமது இருப்புகளை தக்கவைத்துக் கொள்வதற்காக மலையக மக்கள் மத்தியில் பாகுபாடுகளை ஏற்படுத்துவது மாத்திரமன்றி, அவர்கள் தொடர்ந்தும் ஓர் தங்கி வாழும் சமூகமாக நடத்தி வருகின்றார்கள். இதற்கு குறிப்பாக எமது இளைஞர், யுவதிகள் மத்தியில் போதிய அரசியல் விழிப்புணர்வு அரசறிவியற்கல்வி இன்மையே காரணம் எனலாம்.

எனவே, எமது சமூகம் அரசறிவியற் துறையில் தெளிவு பெற்றவர்களாக மாற வேண்டியது அவசியமானது. ஜனநாயகம், நல்லாட்சி, நல்ல தலைமைத்துவம் போன்றன பற்றி தெளிவான அறிவினையும் நாளாந்த சட்ட திட்டங்களையும் தெரிந்துவைத்திருத்தல் வேண்டும்.

அரசியல் சித்தாந்தம், கட்சி அரசியல், ஜனநாயக அரசியல், தலைமைத்துவம், அதன் செயற்பாடுகள், சமூக தேவைகள், அபிவிருத்தி செயற்பாடுகள், ஆளுமை விருத்தி, சிறந்த பங்கேற்பு போன்ற துறைகளில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள், அணுகுமுறைகள் போன்றன பற்றி அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போதே நாம் நமக்காக சுயமாக சிந்தித்து சொந்த கால்களில் நின்று செயற்படுகின்ற நிலையை உருவாக்க முடியும். இதனூடாகவே மலையகத்துக்கென்ற அரசியல் கலாசாரத்தை உருவாக்க முடியும். தலைவர்களுக்காக நாம் என்ற நிலை மாறி எமக்காக தலைவர்கள் என்ற நிலை உருவாகும். மலையகம் ஓர் புதிய புரட்சியில் ஈடுபட முடியும்என்றார்.

இந்நிகழ்வில் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Email this page Your Opinion Print this page
நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்திய அரசு வெற்றி
யுத்த நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறது ஐ.தே.க.
சாவகச்சேரியில் பாரிய சுற்றிவளைப்பு, தேடுதல் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோரிடம் விசாரணை
சார்க் அமைப்பின் தலைவராக ராஜபக்ஷ வருவதைத்தவிர உச்சி மாநாட்டால் இலங்கைக்கு எந்த நன்மையும் இல்லை
மீசாலையை சேர்ந்தவர் நெல்லியடியில் சுட்டுக்கொலை
உடையார்கட்டு குளம் மீது கடும் விமானத்தாக்குதல்
மீள் குடியேற்றத்துக்கு பொறுப்பாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி
புல்மோட்டை கடலில் கடும் சமர் புலிகளின் படகு மூழ்கடிப்பு
தெகிவளையில் 2 தமிழர்கள் கடத்தல்
வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் தேர்தல் வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரிப்பு
7 மாதங்களில் 240 புலிகளின் உடல்கள் ஐ.சி.ஆர்.சி.யூடாக ஒப்படைப்பு
ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் கலரியில் இருந்தவேளை சபையில் அமைச்சர் டக்ளஸ் சிவாஜிலிங்கம் வாய்ச்சண்டை
புலிகளின் அறிவிப்புக்கு அரசின் உதாசீனம் நேர்மையான தீர்வு கிடையாது என்பதன் வெளிப்பாடு
உள்நாட்டு யுத்தம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதால் மிக மோசமான நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளோம்
"ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும்'
தேர்தல் பிரசாரத்தின் போது அரச சொத்துகளை கட்சிகள் துஷ்பிரயோகம் செய்வதாக முறைப்பாடு
உலக சனத்தொகையில் 23 சதவீதமானோருக்கு தலைமைதாங்கும் பொறுப்பு சார்க் மூலம் ஜனாதிபதிக்கு கிடைக்கும்
மீனவர்கள் காலியில் ஆர்ப்பாட்டம்
ஆடி அமாவாசை விரதம் தொடர்பாக பஞ்சாங்கங்கள் கருத்து வேறுபாடு
வெள்ளத்தில் மூழ்கி 2 வயதுக்குழந்தை பலி
வவுனியாவில் இம்மாத முற்பகுதியில் கடத்தப்பட்டவர் திங்கள் இரவு சுட்டுக்கொலை
கிழக்கு மாகாணத்தில் எமது அரசியல் செயற்பாடுகளை முடக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற பிரதிநிதிகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பு
மன்னார் ஆயர் இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ள மடுமாதா தேவாலய திருச்சொரூபம்
யாழ்.உரும்பிராயில் இளைஞர் சுட்டுக்கொலை
நவாலியில் கொள்ளையர்கள் அட்டகாசம் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
பொறிவெடியில் சிக்கி இரு படையினர் காயம்
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை இந்திய நிறுவனத்துடன் இணைந்து இயக்க ஏற்பாடு
புலிகளின் குரல் போராளி கலைஞர் கலையரசன் மரணம்
மதவழிபாட்டு தலங்களுக்கு மின்கட்டண சலுகை வழங்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை
மீண்டும் எம்.பி.யாக ஹசன் அலி சத்தியப்பிரமாணம்
வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஐ.தே.கட்சி ஆதரவு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தால் பங்கேற்பு
நேபாளத்தில் புதிய அரசாங்கத்தை அமைக்க மாவோயிஸ்ட்டுகள் மறுப்பு
பொய்ச்சாட்சியம் அளித்த பதிவாளருக்கும் மனைவிக்கும் இரண்டு வருட கடூழியச்சிறை
திருமணமான முன்னாள் காதலியை குத்தி கொலைசெய்த நபருக்கு மரண தண்டனை
மனித உரிமை பாதுகாவலர்களுக்கு ஆறு மாதகால பயிற்சிநெறி
"கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு யூ.என்.டி.பி. உதவ வேண்டும்'
சிறுபான்மையின மக்களுக்கெதிரான அச்சுறுத்தல்கள் முற்றாக அகற்றப்பட வேண்டும்
மலையக சமூகம் கல்வியில் அபிவிருத்தி காண்கின்றபோதும் அரசறிவியல் கல்வியில் போதிய மாற்றங்கள் இல்லை
இரத்தினபுரி மாவட்ட மக்கள் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தி ம.ம.மு. வெற்றிபெறச் செய்ய வேண்டும்
பாண்டிருப்பு கிராம விளையாட்டு மைதானத்தின் தடுப்பு சுவர் அமைக்க 32 இலட்சம் ரூபா ஒதுக்கீடு
வடமேல் மாகாண கல்வித்தரம் 2010இல் முதல் இடத்துக்கு வர நாம் செயற்படுகின்றோம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com