Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, July 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
"கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு யூ.என்.டி.பி. உதவ வேண்டும்'
[23 - July - 2008] [Font Size - A - A - A]
"கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு யூ.என்.டி.பி. உதவ வேண்டும்'

அம்பாறை மாவட்டத்தில் கடல்கோள் அனர்த்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்டுள்ள சின்னமுகத்துவார மக்களின் வாழ்வாதார பொருளாதாரத்தை மேம்படுத்த ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் (யூ.என்.டி.பி.) அதிகளவு திட்டங்களை செயற்படுத்தி தரவேண்டும் என தீவுக்காலை பல் தேவைக் கட்டிடத்தில் பயன்தரும் மரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதேச செயலாளர் எஸ்.கரன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று 8 கிராம அபிவிருத்தி சங்கம் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்ட அனுசரணையுடன் கொரியன் சூழலைப் பாதுகாக்கும் நிதியம் இயற்கை வளங்களை மீள்நிலைத்திருக்க செய்யும் செயற்றிட்டத்தின் கீழ் 5 இலட்சம் ரூபா பெறுமதியான மா, தென்னை, தேக்கு போன்ற மரக்கன்றுகளை வழங்கும் நிகழ்வு தீவுக்காலை பல்தேவைக் கட்டிடத்தில் அக்கரைப்பற்று 8 கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஆலையடி வேம்பு பிரதேச செயலாளர் எஸ்.கரன் தொடர்ந்து பேசுகையில்;

இன்று உலக நாடுகளையே அபிவிருத்தி செய்கின்ற யூ.என்.டி.பி. நிறுவனம் அனர்த்த முகாமைத்துவ திட்டத்தின் கீழ் முதல்முறையாக இக்கிராமத்தில் பயன்தரும் மரங்களை வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.

மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டு இதனூடாக பயன்பெற வேண்டும்.

இத்துடன் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார, பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அதிகளவு செய்து தரவேண்டும் என்றார்.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி பூஜார்டீன் உரையாற்றுகையில்;

இன்று உங்களுக்கு ஏற்பட்டுள்ள அனர்த்தம் இந்த உலகத்தில் யாருக்கும் நடக்கவில்லை. ஏனென்றால் ஒரு நகர மயமாக்கப்பட்ட மீனவர்களாக இருந்த சமுதாயத்தை இரவோடு இரவாக கிராமிய விவசாய சமுதாயமாக மாற்றியமைக்கும் நிலைமையேற்பட்டுள்ளது.

விவசாய சமுதாயமாக மாற்றப்பட்டுள்ள உங்களுடைய வாழ்வாதார, பொருளாதார வீழ்ச்சியில் இருந்து உயர்வதற்கு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்ட அனர்த்த முகாமைத்துவத்தினூடாக சேவை ஆற்ற தயாராக இருக்கிறோம்.

எனவே எமது ஆரம்ப இத் திட்டத்தை நல்ல முறையில் வெற்றிபெற செயல்படுத்த நீங்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கினால் அனர்த்த முகாமைத்துவத்திற்காக இன்று அதிக நிறுவனங்கள் பணத்துடன் இருக்கின்றார்கள். அவர்கள் மூலம் பலதிட்டங்களை செயல்படுத்த ஏற்பாடுகளை செய்து தரமுடியும் என்றார்.

இந்நிகழ்வில் யு.என்.டி.பி. அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எஸ்.சியாற் திட்ட அதிகாரி தணிகசீலன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

Email this page Your Opinion Print this page
நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்திய அரசு வெற்றி
யுத்த நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறது ஐ.தே.க.
சாவகச்சேரியில் பாரிய சுற்றிவளைப்பு, தேடுதல் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோரிடம் விசாரணை
சார்க் அமைப்பின் தலைவராக ராஜபக்ஷ வருவதைத்தவிர உச்சி மாநாட்டால் இலங்கைக்கு எந்த நன்மையும் இல்லை
மீசாலையை சேர்ந்தவர் நெல்லியடியில் சுட்டுக்கொலை
உடையார்கட்டு குளம் மீது கடும் விமானத்தாக்குதல்
மீள் குடியேற்றத்துக்கு பொறுப்பாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி
புல்மோட்டை கடலில் கடும் சமர் புலிகளின் படகு மூழ்கடிப்பு
தெகிவளையில் 2 தமிழர்கள் கடத்தல்
வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் தேர்தல் வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரிப்பு
7 மாதங்களில் 240 புலிகளின் உடல்கள் ஐ.சி.ஆர்.சி.யூடாக ஒப்படைப்பு
ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் கலரியில் இருந்தவேளை சபையில் அமைச்சர் டக்ளஸ் சிவாஜிலிங்கம் வாய்ச்சண்டை
புலிகளின் அறிவிப்புக்கு அரசின் உதாசீனம் நேர்மையான தீர்வு கிடையாது என்பதன் வெளிப்பாடு
உள்நாட்டு யுத்தம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதால் மிக மோசமான நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளோம்
"ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும்'
தேர்தல் பிரசாரத்தின் போது அரச சொத்துகளை கட்சிகள் துஷ்பிரயோகம் செய்வதாக முறைப்பாடு
உலக சனத்தொகையில் 23 சதவீதமானோருக்கு தலைமைதாங்கும் பொறுப்பு சார்க் மூலம் ஜனாதிபதிக்கு கிடைக்கும்
மீனவர்கள் காலியில் ஆர்ப்பாட்டம்
ஆடி அமாவாசை விரதம் தொடர்பாக பஞ்சாங்கங்கள் கருத்து வேறுபாடு
வெள்ளத்தில் மூழ்கி 2 வயதுக்குழந்தை பலி
வவுனியாவில் இம்மாத முற்பகுதியில் கடத்தப்பட்டவர் திங்கள் இரவு சுட்டுக்கொலை
கிழக்கு மாகாணத்தில் எமது அரசியல் செயற்பாடுகளை முடக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற பிரதிநிதிகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பு
மன்னார் ஆயர் இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ள மடுமாதா தேவாலய திருச்சொரூபம்
யாழ்.உரும்பிராயில் இளைஞர் சுட்டுக்கொலை
நவாலியில் கொள்ளையர்கள் அட்டகாசம் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
பொறிவெடியில் சிக்கி இரு படையினர் காயம்
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை இந்திய நிறுவனத்துடன் இணைந்து இயக்க ஏற்பாடு
புலிகளின் குரல் போராளி கலைஞர் கலையரசன் மரணம்
மதவழிபாட்டு தலங்களுக்கு மின்கட்டண சலுகை வழங்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை
மீண்டும் எம்.பி.யாக ஹசன் அலி சத்தியப்பிரமாணம்
வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஐ.தே.கட்சி ஆதரவு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தால் பங்கேற்பு
நேபாளத்தில் புதிய அரசாங்கத்தை அமைக்க மாவோயிஸ்ட்டுகள் மறுப்பு
பொய்ச்சாட்சியம் அளித்த பதிவாளருக்கும் மனைவிக்கும் இரண்டு வருட கடூழியச்சிறை
திருமணமான முன்னாள் காதலியை குத்தி கொலைசெய்த நபருக்கு மரண தண்டனை
மனித உரிமை பாதுகாவலர்களுக்கு ஆறு மாதகால பயிற்சிநெறி
"கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு யூ.என்.டி.பி. உதவ வேண்டும்'
சிறுபான்மையின மக்களுக்கெதிரான அச்சுறுத்தல்கள் முற்றாக அகற்றப்பட வேண்டும்
மலையக சமூகம் கல்வியில் அபிவிருத்தி காண்கின்றபோதும் அரசறிவியல் கல்வியில் போதிய மாற்றங்கள் இல்லை
இரத்தினபுரி மாவட்ட மக்கள் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தி ம.ம.மு. வெற்றிபெறச் செய்ய வேண்டும்
பாண்டிருப்பு கிராம விளையாட்டு மைதானத்தின் தடுப்பு சுவர் அமைக்க 32 இலட்சம் ரூபா ஒதுக்கீடு
வடமேல் மாகாண கல்வித்தரம் 2010இல் முதல் இடத்துக்கு வர நாம் செயற்படுகின்றோம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com