Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, July 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மனித உரிமை பாதுகாவலர்களுக்கு ஆறு மாதகால பயிற்சிநெறி
[23 - July - 2008] [Font Size - A - A - A]
மனித உரிமை பாதுகாவலர்களுக்கான ஆறு மாத காலப்பயிற்சி நெறி ஒன்றை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான தேசியப் பாதுகாப்பிற்கும் நிரந்தர தீர்வுக்குமான செயற்றிட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கவிருக்கிறது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏழு பிராந்தியங்களில் வாழும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்களில் இருந்து தெரிவு செய்யப்படுபவர்களுக்கே இப்பயிற்சி நெறி வழங்கப்படவுள்ளது.

இதன்படி திருகோணமலைப் பிராந்தியத்தில் வசிக்கும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரிலிருந்து முதல் தொகுதியாக அறுபது பேர் இப்பயிற்சி நெறிக்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்கான விண்ணப்பங்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உள்ளக இடம்பெயர்ந்தோருக்கான நிரந்தர தீர்விற்கும் தேசிய பாதுகாப்பிற்குமான செயற்றிட்டத்தின் திருகோணமலை அலுவலகம் திருகோணமலைப் பட்டினமும் சூழலும், கிண்ணியா, குச்சவெளி, மூதூர், ஈச்சிலம்பற்று, சேருவில ஆகிய பிரதேச செயலகங்கள் ஊடாகக் கோரியுள்ளது. இதற்கான விண்ணப்பப்படிவங்கள் இப்பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பங்களை அனுப்பும் கடைசித் திகதி இம்மாதம் 25 ஆம் திகதியாகும்.

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், ஈச்சிலம்பற்று, சேருவில, குச்சவெளி, கிண்ணியா, திருகோணமலை பட்டினமும் சூழலும் ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் 17,965 உள்ளக இடம்பெயர்ந்தோர் வாழ்கின்றனர். இவர்களில் 6,579 பேர் பதினெட்டு (18) நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 11,386 பேரில் ஒரு தொகுதியினர் உறவினர்களுடன் தங்கியுள்ளனர். இன்னும் ஒரு தொகுதியினர் மீளக்குடியமர்த்தப்பட்டனர். ஏனையோர் மீள் குடியேற்றப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

தனது சமூகத்திற்காக தனிப்பட்ட முறையிலும் சமூகத்தின் சார்பிலும் செயற்படக்கூடியவர்களுக்கு இம்மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கான பயிற்சிநெறி வழங்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தெரிவு செய்யப்படும் உள்ளக இடம்பெயர்ந்தோருக்கு மனித உரிமைகள் பேணலின் ஆரம்பகாலம், அடிப்படை நியமங்கள், இலங்கையில் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகளின் நிலைப்பாடு, மனித உரிமைகள் யாவை மற்றும் உள்ளக இடம்பெயர்ந்தோருக்குள்ள உரிமைகள், அவற்றைப் பெறும் வழிவகைகள் பற்றி இப்பயிற்சிநெறியின் போது விளக்கமளிக்கப்படும். இலவசமாக நடத்தப்படும். இப்பயிற்சிநெறிக்கு விண்ணப்பிப்போர் 20 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்கவேண்டும், ஆகக் குறைந்தது க.பொ.த. (சாதாரணதரம்) வரை கற்றிருக்க வேண்டும். சிறந்தமொழி ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டும், சமூகசேவை மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் ஆர்வமுடையவராக இருத்தல் வேண்டும். மற்றும் சகல இனங்களைச் சேர்ந்த மக்களுடனும் இணைந்து வேலை செய்யக்கூடியவராக இருக்க வேண்டும். ஆகிய தகைமைகளைக் கொண்டிருக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப்படிவங்களை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் திருகோணமலை அலுவலகத்திலும் பெறமுடியும்.

Email this page Your Opinion Print this page
நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்திய அரசு வெற்றி
யுத்த நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறது ஐ.தே.க.
சாவகச்சேரியில் பாரிய சுற்றிவளைப்பு, தேடுதல் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோரிடம் விசாரணை
சார்க் அமைப்பின் தலைவராக ராஜபக்ஷ வருவதைத்தவிர உச்சி மாநாட்டால் இலங்கைக்கு எந்த நன்மையும் இல்லை
மீசாலையை சேர்ந்தவர் நெல்லியடியில் சுட்டுக்கொலை
உடையார்கட்டு குளம் மீது கடும் விமானத்தாக்குதல்
மீள் குடியேற்றத்துக்கு பொறுப்பாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி
புல்மோட்டை கடலில் கடும் சமர் புலிகளின் படகு மூழ்கடிப்பு
தெகிவளையில் 2 தமிழர்கள் கடத்தல்
வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் தேர்தல் வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரிப்பு
7 மாதங்களில் 240 புலிகளின் உடல்கள் ஐ.சி.ஆர்.சி.யூடாக ஒப்படைப்பு
ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் கலரியில் இருந்தவேளை சபையில் அமைச்சர் டக்ளஸ் சிவாஜிலிங்கம் வாய்ச்சண்டை
புலிகளின் அறிவிப்புக்கு அரசின் உதாசீனம் நேர்மையான தீர்வு கிடையாது என்பதன் வெளிப்பாடு
உள்நாட்டு யுத்தம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதால் மிக மோசமான நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளோம்
"ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும்'
தேர்தல் பிரசாரத்தின் போது அரச சொத்துகளை கட்சிகள் துஷ்பிரயோகம் செய்வதாக முறைப்பாடு
உலக சனத்தொகையில் 23 சதவீதமானோருக்கு தலைமைதாங்கும் பொறுப்பு சார்க் மூலம் ஜனாதிபதிக்கு கிடைக்கும்
மீனவர்கள் காலியில் ஆர்ப்பாட்டம்
ஆடி அமாவாசை விரதம் தொடர்பாக பஞ்சாங்கங்கள் கருத்து வேறுபாடு
வெள்ளத்தில் மூழ்கி 2 வயதுக்குழந்தை பலி
வவுனியாவில் இம்மாத முற்பகுதியில் கடத்தப்பட்டவர் திங்கள் இரவு சுட்டுக்கொலை
கிழக்கு மாகாணத்தில் எமது அரசியல் செயற்பாடுகளை முடக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற பிரதிநிதிகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பு
மன்னார் ஆயர் இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ள மடுமாதா தேவாலய திருச்சொரூபம்
யாழ்.உரும்பிராயில் இளைஞர் சுட்டுக்கொலை
நவாலியில் கொள்ளையர்கள் அட்டகாசம் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
பொறிவெடியில் சிக்கி இரு படையினர் காயம்
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை இந்திய நிறுவனத்துடன் இணைந்து இயக்க ஏற்பாடு
புலிகளின் குரல் போராளி கலைஞர் கலையரசன் மரணம்
மதவழிபாட்டு தலங்களுக்கு மின்கட்டண சலுகை வழங்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை
மீண்டும் எம்.பி.யாக ஹசன் அலி சத்தியப்பிரமாணம்
வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஐ.தே.கட்சி ஆதரவு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தால் பங்கேற்பு
நேபாளத்தில் புதிய அரசாங்கத்தை அமைக்க மாவோயிஸ்ட்டுகள் மறுப்பு
பொய்ச்சாட்சியம் அளித்த பதிவாளருக்கும் மனைவிக்கும் இரண்டு வருட கடூழியச்சிறை
திருமணமான முன்னாள் காதலியை குத்தி கொலைசெய்த நபருக்கு மரண தண்டனை
மனித உரிமை பாதுகாவலர்களுக்கு ஆறு மாதகால பயிற்சிநெறி
"கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு யூ.என்.டி.பி. உதவ வேண்டும்'
சிறுபான்மையின மக்களுக்கெதிரான அச்சுறுத்தல்கள் முற்றாக அகற்றப்பட வேண்டும்
மலையக சமூகம் கல்வியில் அபிவிருத்தி காண்கின்றபோதும் அரசறிவியல் கல்வியில் போதிய மாற்றங்கள் இல்லை
இரத்தினபுரி மாவட்ட மக்கள் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தி ம.ம.மு. வெற்றிபெறச் செய்ய வேண்டும்
பாண்டிருப்பு கிராம விளையாட்டு மைதானத்தின் தடுப்பு சுவர் அமைக்க 32 இலட்சம் ரூபா ஒதுக்கீடு
வடமேல் மாகாண கல்வித்தரம் 2010இல் முதல் இடத்துக்கு வர நாம் செயற்படுகின்றோம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com