தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகமான புலிகளின் குரல் நிறுவனத்தின் போராளிக் கலைஞரான இரண்டாம் லெப்.கலையரசன் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் புலிகளின் குரல் நிறுவனத்தின் தமிழீழ வானொலியின் அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சிப் படைப்பாளராகவும் குரல் வழங்குனராகவும் நடிகராகவும் செயற்பட்டவர் கலையரசன்.
இசை ஆர்வம் கொண்டு பாடல் பாடும் வளம் கொண்ட இவர் பாடல்களை எழுதும் ஆற்றலையும் கொண்டவர்.
தமிழீழ வானொலியில் சிறந்த ஒரு தொகுப்பு அறிவிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் இவர் விளங்கியதுடன் புலிகளின் குரல் நிறுவனத்துக்கான செய்தி சேகரிப்புப் பணியிலும் இவர் செயலாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.