யாழ்.உரும்பிராயில் இளைஞர் ஒருவர் இனந்தெரியாத ஆயுததாரியால் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
உரும்பிராய் யோகபுரத்தைச் சேர்ந்த 22 வயதான ராசுக்குட்டி சந்திரமோகன் என்பவரே தமது வீடியோக் கடையில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்தோரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.