விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான தேவன்பிட்டித் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த மடுமாதா திருச்சொரூபம் ஓமந்தை சோதனைச் சாவடியூடாக எடுத்துவரப்பட்டு இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக மடுமாதா திருச்சொரூபம் தேவன்பிட்டி தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அப்பிரதேசங்களிலும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதால் மக்கள் இடம்பெயரும் நிலை உருவாகியிருப்பதால் மடுமாதா திருச்சொரூபம் அங்கிருந்து கொண்டு வரப்பட்டு மன்னார் ஆயர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மன்னார் மடுமாதா ஆலயத்தின் புனர் நிர்மாணப் பணிகள் ஒன்றரை மில்லியன் ரூபா செலவில் நடைபெற்று வருவதாகவும் வெகுவிரைவில் மடுமாதா திருச்சொரூபம் அத் தேவாலயத்தில் வைக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.