வவுனியா திருநாவற்குளம் பகுதியில் இம்மாத முற்பகுதியில் கடத்தப்பட்ட இளைஞனொருவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை இரவு இவரது வீட்டிற்கு அருகில், ஆட்டோ ஒன்றில் கொண்டுவரப்பட்டே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த 04 ஆம் திகதி இவர் இனந்தெரியாத கோஷ்டியொன்றினால் கடத்திச்செல்லப்பட்ட நிலையில் உறவினர்கள் இவரைத் தேடிவந்தனர்.
இந்த நிலையில் திங்கட்கிழமை இரவு, ஆட்டோ ஒன்றில் இவரைக் கொண்டுவந்த ஆயுதபாணிகள் வீட்டிற்கு அருகில் வைத்து இவரைச் சுட்டுக்கொன்றுவிட்டு சென்றுள்ளனர்.
இவரது உறவினர்கள் நேற்றுக்காலை வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது இவர் அங்கு இறந்துகிடந்துள்ளார்.
தலையில் துப்பாக்கிச் சூட்டுக்காயமும் காணப்பட்டது.
சண்முகலிங்கம் கேதாரம் (29 வயது) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவராவார். சடலம் பின்னர் வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.