கம்பஹாவில் மழை வெள்ள நீரில் மூழ்கி இரண்டு வயதுக் குழந்தை ஒன்று பரிதாபகரமாக மரணமான சம்பவம் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
இக்குழந்தை வேறு குழந்தையுடன் சேர்ந்து வெள்ளம் இல்லாத பகுதியில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் திடீரென வெள்ளத்தில் விளையாடியதாகவும் அப்போது தவறி கீழே விழுந்துவிட்டதாகவும் மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
மற்றக் குழந்தை ஒருவாறு வெள்ள நீரில் இருந்து மீட்கப்பட்டு விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வாரம் கம்பஹாவில் கடும் மழை பெய்ததால் இந்த வெள்ளம் ஏற்பட்டது. தற்போது வெள்ள நீர் வடிந்தோடுகிறது.