எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து காலி நகரில் வெள்ளிக்கிழமை இப்பிரதேச மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இவர்கள் தமக்கு மானிய அடிப்படையில் எரிபொருள் தரவேண்டும் எனவும், எரிபொருள் விலை உயர்வால் தமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் சுலோகங்களும் தாங்கி நின்றனர்.
தென் மாகாண சபை மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் நிசாந்த பெரேரா தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சுமார் ஒரு மணி நேரமாக நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவ குடும்பங்கள் பலர் கலந்து கொண்டனர்.