Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, July 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
உள்நாட்டு யுத்தம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதால் மிக மோசமான நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளோம்
[23 - July - 2008] [Font Size - A - A - A]
* ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிப்பு

உள்நாட்டு யுத்தம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவது காரணமாக மிக மோசமான நஷ்டத்தைத் தாம் எதிர்கொண்டுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சிரேஷ்ட அரசாங்க அதிகாரியொருவர் தெரிவிக்கையில் கூறியதாவது;

விடுதலைப் புலிகள் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலாத்துறையையும் இலக்கு வைத்துள்ளனர்.

இதேவேளை, உல்லாசப் பயணிகள் எதிர்கொண்டுள்ள அச்சம் காரணமாக கடந்த மே மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 9.3 வீதத்தால் வீழ்ச்சி கண்டிருந்தது. எனினும் சுற்றுலா மேம்பாட்டுக்கான அமைப்பினால் இந்த பாதிப்பைத் தடுத்து நிறுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதோடு இதனை தடுத்து நிறுத்த சுற்றுலாத்துறைக்கு உதவ முடியும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலைமை தொடர்பாக கருத்துத் தெரிவித்த சுற்றுலாத்துறை செயலாளர் ஜோர்ஜ் மைக்கேல் இலங்கைக்கு எதிராக ஜப்பான் தெரிவித்துவரும் சுற்றுலா பயண அச்சுறுத்தலைத் தடுத்து நிறுத்த அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இப்பிரச்சினை பற்றி கலந்துரையாடுவதற்கு பிரதி வெளியுறவு அமைச்சர் டோக்கியோ சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்தவாரம் இலங்கை ஹோட்டல் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட ஸ்ரீலால் மித்த பால இது தொடர்பாக தெரிவிக்கையில்;

தற்போது சுற்றுலாத்துறை எதிர்கொண்டுள்ள மோசமான பாதிப்பு சாத்தியமான ஒன்றே எனவும் இவ்வாறான நிலைமைகளை சுற்றுலாத்துறை ஏற்கனவே முகம்கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆயினும், அச்சத்துடன் கூடிய இந்த நிலைமைகளை மேம்படுத்த தாம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த மித்தபால பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கு அரசாங்கத்துக்கு உதவுவதன்மூலம் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அக்கறையுடன் செயற்பட சுற்றுலாத்துறை தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம், கடந்த 30 வருடங்களாக பிரிவினை கோரி விடுதலைப் புலிகள் மேற்கொண்டுவரும் யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததைத் தொடர்ந்து சம்பிரதாய பூர்வமாக இருந்த யுத்த நிறுத்தமும் இந்த வருடத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை வருடாந்தம் 6 வீத அதிகரிப்பை பேணிவந்த போதும் 19832004 காலப்பகுதிகளில் சுற்றுலாத்துறை 6.3 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழந்துள்ளதாக மார்கா நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் பாலித கோஹண சுற்றுலாத்துறையின் நிலை பற்றி தெரிவிக்கையில்;

கடந்த காலங்களில் பொருளாதார இலக்குகளை விடுதலைப் புலிகள் தாக்கியதன் மூலம் இராணுவ நடவடிக்கைகளில் வெற்றி பெற்றனர் எனத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு யுத்தங்களின் போதும் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் அடிப்படையிலேயே வெற்றி, தோல்விகள் மதிப்பிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்திய அரசு வெற்றி
யுத்த நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறது ஐ.தே.க.
சாவகச்சேரியில் பாரிய சுற்றிவளைப்பு, தேடுதல் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோரிடம் விசாரணை
சார்க் அமைப்பின் தலைவராக ராஜபக்ஷ வருவதைத்தவிர உச்சி மாநாட்டால் இலங்கைக்கு எந்த நன்மையும் இல்லை
மீசாலையை சேர்ந்தவர் நெல்லியடியில் சுட்டுக்கொலை
உடையார்கட்டு குளம் மீது கடும் விமானத்தாக்குதல்
மீள் குடியேற்றத்துக்கு பொறுப்பாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி
புல்மோட்டை கடலில் கடும் சமர் புலிகளின் படகு மூழ்கடிப்பு
தெகிவளையில் 2 தமிழர்கள் கடத்தல்
வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் தேர்தல் வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரிப்பு
7 மாதங்களில் 240 புலிகளின் உடல்கள் ஐ.சி.ஆர்.சி.யூடாக ஒப்படைப்பு
ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் கலரியில் இருந்தவேளை சபையில் அமைச்சர் டக்ளஸ் சிவாஜிலிங்கம் வாய்ச்சண்டை
புலிகளின் அறிவிப்புக்கு அரசின் உதாசீனம் நேர்மையான தீர்வு கிடையாது என்பதன் வெளிப்பாடு
உள்நாட்டு யுத்தம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதால் மிக மோசமான நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளோம்
"ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும்'
தேர்தல் பிரசாரத்தின் போது அரச சொத்துகளை கட்சிகள் துஷ்பிரயோகம் செய்வதாக முறைப்பாடு
உலக சனத்தொகையில் 23 சதவீதமானோருக்கு தலைமைதாங்கும் பொறுப்பு சார்க் மூலம் ஜனாதிபதிக்கு கிடைக்கும்
மீனவர்கள் காலியில் ஆர்ப்பாட்டம்
ஆடி அமாவாசை விரதம் தொடர்பாக பஞ்சாங்கங்கள் கருத்து வேறுபாடு
வெள்ளத்தில் மூழ்கி 2 வயதுக்குழந்தை பலி
வவுனியாவில் இம்மாத முற்பகுதியில் கடத்தப்பட்டவர் திங்கள் இரவு சுட்டுக்கொலை
கிழக்கு மாகாணத்தில் எமது அரசியல் செயற்பாடுகளை முடக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற பிரதிநிதிகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பு
மன்னார் ஆயர் இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ள மடுமாதா தேவாலய திருச்சொரூபம்
யாழ்.உரும்பிராயில் இளைஞர் சுட்டுக்கொலை
நவாலியில் கொள்ளையர்கள் அட்டகாசம் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
பொறிவெடியில் சிக்கி இரு படையினர் காயம்
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை இந்திய நிறுவனத்துடன் இணைந்து இயக்க ஏற்பாடு
புலிகளின் குரல் போராளி கலைஞர் கலையரசன் மரணம்
மதவழிபாட்டு தலங்களுக்கு மின்கட்டண சலுகை வழங்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை
மீண்டும் எம்.பி.யாக ஹசன் அலி சத்தியப்பிரமாணம்
வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஐ.தே.கட்சி ஆதரவு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தால் பங்கேற்பு
நேபாளத்தில் புதிய அரசாங்கத்தை அமைக்க மாவோயிஸ்ட்டுகள் மறுப்பு
பொய்ச்சாட்சியம் அளித்த பதிவாளருக்கும் மனைவிக்கும் இரண்டு வருட கடூழியச்சிறை
திருமணமான முன்னாள் காதலியை குத்தி கொலைசெய்த நபருக்கு மரண தண்டனை
மனித உரிமை பாதுகாவலர்களுக்கு ஆறு மாதகால பயிற்சிநெறி
"கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு யூ.என்.டி.பி. உதவ வேண்டும்'
சிறுபான்மையின மக்களுக்கெதிரான அச்சுறுத்தல்கள் முற்றாக அகற்றப்பட வேண்டும்
மலையக சமூகம் கல்வியில் அபிவிருத்தி காண்கின்றபோதும் அரசறிவியல் கல்வியில் போதிய மாற்றங்கள் இல்லை
இரத்தினபுரி மாவட்ட மக்கள் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தி ம.ம.மு. வெற்றிபெறச் செய்ய வேண்டும்
பாண்டிருப்பு கிராம விளையாட்டு மைதானத்தின் தடுப்பு சுவர் அமைக்க 32 இலட்சம் ரூபா ஒதுக்கீடு
வடமேல் மாகாண கல்வித்தரம் 2010இல் முதல் இடத்துக்கு வர நாம் செயற்படுகின்றோம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com