வடபகுதியில் கடந்த ஏழு மாதங்களில் மோதல்களில் உயிரிழந்த 240 விடுதலைப் புலிகளின் உடல்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ஐ.சி.ஆர்.சி) மூலம் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா, மன்னார் மற்றும் மணலாறு பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் உயிரிழந்து பின்னர் படையினரால் கைப்பற்றப்பட்ட புலிகளின் உடல்களே ஐ.சி.ஆர்.சி.யினர் மூலம் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த 240 உடல்களும் நீதிவானின் மரண விசாரணைக்குட்படுத்தப்பட்டும் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே ஐ.சி.ஆர்.சி.யினர் இவற்றை எடுத்துச் சென்று புலிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஷெல் தாக்குதல், துப்பாக்கிச் சூடு மற்றும் சயனைட் உட்கொண்டே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.