Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, July 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் தேர்தல் வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரிப்பு
[23 - July - 2008] [Font Size - A - A - A]
* குற்றம் சாட்டுகிறது ஐ.தே.க.

எம்.ஏ.எம்.நிலாம்

வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் தேர்தல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மோசடிகள் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற ஆளும்தரப்பு முனைவதாகவும் குற்றம் சாட்டியது.

அரச தரப்பின் வன்முறைக் கலாசாரத்துக்கு எதிராக அனைத்து எதிரணியினரும் ஒன்றுபட வேண்டுமெனவும் ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

வடமத்திய மாகாணத்தில் அநுராதபுரம், பொலநறுவை மாவட்டங்களிலும் சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலும் இதுவரையில் 22 தாக்குதல்களும் 20க்கும் மேற்பட்ட வன்முறைகளும் இடம்பெற்றுள்ளன. நாளாந்தம் எதிரணியினர் மீதான அடாவடித்தனங்கள் இடம்பெற்ற வண்ணமே உள்ளது.

பொலநறுவையில் ஆளும் தரப்பை ஆதரிக்காதவர்களின் நெல் ஆலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நெல் ஆலைகள் தீக்கிரையாக்கப்படுமென அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளன.

இன்னொருபுறம் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியை பெறாமல் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றார்கள். சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க முற்படும் பொலிஸ் அதிகாரிகளே இடமாற்றம் செய்யப்படுகின்றனர். அரச தரப்புக்கு காவடி தூக்கும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகள் கூட வழங்கப்படுகின்றன.

இலக்கத் தகடில்லாத வாகன நடமாட்டம்

வடமத்திய மாகாணத்தில் அநுராதபுரத்தில் இலக்கத் தகடில்லாத பல வாகனங்கள் நடமாடிக் கொண்டிருக்கின்றன. இது குறித்து பொலிஸாருக்கு முறையிட்ட போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரியவில்லை.

முன்னாள் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்கா பாவித்த ஙிகஇ2008/2007 இலக்கங்களைக் கொண்ட பல இலக்கத்தகடுகள் பாவிக்கப்பட்டு வருவதையும் காணமுடிகிறது. ஒரே இலக்கத் தகட்டில் மூன்று வாகனங்கள் குறித்து பொலிஸாருக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்டபோதிலும் அவை சர்வசாதாரணமாக நடமாடிக் கொண்டிருப்பதை காணலாம்.

எதிரணியினரின் முறைப்பாடுகளைக் கூட பொலிஸார் ஏற்பதாக இல்லை. சில சந்தர்ப்பங்களில் முறையிடச் சென்றால் முறைப்பாட்டாளரையே கைது செய்ய பொலிஸார் முனைகின்றனர். அந்தளவுக்கு அரச வன்முறைகள் தலைவிரித்தாடுகின்றது.

நீதிமன்றம் பொலிஸாரை எச்சரித்தபோதிலும் பொலிஸாரின் செயற்பாடுகளில் மாற்றம் காணப்படவில்லை. ஆளுந்தரப்புக்காக மட்டுமே பொலிஸார் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

கிராமப்புறங்களின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட ஊர்காவல் படையினர் முன்னாள் முதலமைச்சரால் அழைக்கப்பட்டு தனிப்பட்ட சலுகைகள் வழங்கி தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றனர். அரச வளங்களும் வாகனங்களும் தாராளமாக பயன்படுத்தப்படுகின்றன.

அரசின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக எதிரணிகள் அனைத்தும் ஒன்றுபட்டு குரல் எழுப்பமுன்வர வேண்டும். ஜனநாயகத்தையும் வாக்குரிமையையும் பாதுகாக்க ஒன்றுபடுமாறு அழைக்கின்றோம். நாட்டின் இறைமையையும் மக்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்க கட்சி வேறுபாடுகளின்றி ஒன்றுபட வேண்டிய அவசரம் உருவாகியுள்ளது? எனவும் திஸ்ஸ அத்தநாயக்கா சுட்டிக்காட்டினார்.

Email this page Your Opinion Print this page
நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்திய அரசு வெற்றி
யுத்த நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறது ஐ.தே.க.
சாவகச்சேரியில் பாரிய சுற்றிவளைப்பு, தேடுதல் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோரிடம் விசாரணை
சார்க் அமைப்பின் தலைவராக ராஜபக்ஷ வருவதைத்தவிர உச்சி மாநாட்டால் இலங்கைக்கு எந்த நன்மையும் இல்லை
மீசாலையை சேர்ந்தவர் நெல்லியடியில் சுட்டுக்கொலை
உடையார்கட்டு குளம் மீது கடும் விமானத்தாக்குதல்
மீள் குடியேற்றத்துக்கு பொறுப்பாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி
புல்மோட்டை கடலில் கடும் சமர் புலிகளின் படகு மூழ்கடிப்பு
தெகிவளையில் 2 தமிழர்கள் கடத்தல்
வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் தேர்தல் வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரிப்பு
7 மாதங்களில் 240 புலிகளின் உடல்கள் ஐ.சி.ஆர்.சி.யூடாக ஒப்படைப்பு
ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் கலரியில் இருந்தவேளை சபையில் அமைச்சர் டக்ளஸ் சிவாஜிலிங்கம் வாய்ச்சண்டை
புலிகளின் அறிவிப்புக்கு அரசின் உதாசீனம் நேர்மையான தீர்வு கிடையாது என்பதன் வெளிப்பாடு
உள்நாட்டு யுத்தம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதால் மிக மோசமான நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளோம்
"ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும்'
தேர்தல் பிரசாரத்தின் போது அரச சொத்துகளை கட்சிகள் துஷ்பிரயோகம் செய்வதாக முறைப்பாடு
உலக சனத்தொகையில் 23 சதவீதமானோருக்கு தலைமைதாங்கும் பொறுப்பு சார்க் மூலம் ஜனாதிபதிக்கு கிடைக்கும்
மீனவர்கள் காலியில் ஆர்ப்பாட்டம்
ஆடி அமாவாசை விரதம் தொடர்பாக பஞ்சாங்கங்கள் கருத்து வேறுபாடு
வெள்ளத்தில் மூழ்கி 2 வயதுக்குழந்தை பலி
வவுனியாவில் இம்மாத முற்பகுதியில் கடத்தப்பட்டவர் திங்கள் இரவு சுட்டுக்கொலை
கிழக்கு மாகாணத்தில் எமது அரசியல் செயற்பாடுகளை முடக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற பிரதிநிதிகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பு
மன்னார் ஆயர் இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ள மடுமாதா தேவாலய திருச்சொரூபம்
யாழ்.உரும்பிராயில் இளைஞர் சுட்டுக்கொலை
நவாலியில் கொள்ளையர்கள் அட்டகாசம் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
பொறிவெடியில் சிக்கி இரு படையினர் காயம்
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை இந்திய நிறுவனத்துடன் இணைந்து இயக்க ஏற்பாடு
புலிகளின் குரல் போராளி கலைஞர் கலையரசன் மரணம்
மதவழிபாட்டு தலங்களுக்கு மின்கட்டண சலுகை வழங்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை
மீண்டும் எம்.பி.யாக ஹசன் அலி சத்தியப்பிரமாணம்
வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஐ.தே.கட்சி ஆதரவு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தால் பங்கேற்பு
நேபாளத்தில் புதிய அரசாங்கத்தை அமைக்க மாவோயிஸ்ட்டுகள் மறுப்பு
பொய்ச்சாட்சியம் அளித்த பதிவாளருக்கும் மனைவிக்கும் இரண்டு வருட கடூழியச்சிறை
திருமணமான முன்னாள் காதலியை குத்தி கொலைசெய்த நபருக்கு மரண தண்டனை
மனித உரிமை பாதுகாவலர்களுக்கு ஆறு மாதகால பயிற்சிநெறி
"கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு யூ.என்.டி.பி. உதவ வேண்டும்'
சிறுபான்மையின மக்களுக்கெதிரான அச்சுறுத்தல்கள் முற்றாக அகற்றப்பட வேண்டும்
மலையக சமூகம் கல்வியில் அபிவிருத்தி காண்கின்றபோதும் அரசறிவியல் கல்வியில் போதிய மாற்றங்கள் இல்லை
இரத்தினபுரி மாவட்ட மக்கள் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தி ம.ம.மு. வெற்றிபெறச் செய்ய வேண்டும்
பாண்டிருப்பு கிராம விளையாட்டு மைதானத்தின் தடுப்பு சுவர் அமைக்க 32 இலட்சம் ரூபா ஒதுக்கீடு
வடமேல் மாகாண கல்வித்தரம் 2010இல் முதல் இடத்துக்கு வர நாம் செயற்படுகின்றோம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com