தெகிவளை , காலி வீதி எஸ்.ஜே.சி.கிறியேசன் நிலையத்தில் தொழில் புரியும் முத்துகுமாரு செல்வகுமார் என்ற 28 வயதுடைய தமிழ் இளைஞரும் 37 வயதுடைய பழனியாண்டி சண்முகராஜாவும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 7.30 மணியளவில் வெள்ளை வானில் சீருடையில் வந்த நபர்களினால் கடத்தப்பட்டுள்ளனர்.
செல்வகுமார் பண்டாரிகுளம் வவுனியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவராவார்.சண்முகராஜா மாத்தளை, அலுவிகாரையைப் பிறப்பிடமாகக் கொண்டவராவார். இவர் இரு பெண்பிள்ளைகளின் தகப்பனாராவார். இச்சம்பவங்கள் தொடர்பாக இவர்களுடன் தொழில் புரியும் சக ஊழியர் ஒருவர் மக்கள் கண்காணிப்புக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
அத்துடன் இச்சம்பவங்கள் தொடர்பாக தெகிவளை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இம்முறைப்பாடுகள் மேல் நடவடிக்கைகளுக்காக மக்கள் கண்காணிப்புக் குழுவின் காணாமல்போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் எம்.பி.தெரிவித்துள்ளார்.