வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் மீள் குடியேற்றத்திட்டங்களை அமுலாக்கும் நடவடிக்கைக்கு பொறுப்பாக ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட உப அலுவலகங்கள் திறக்கப்பட்டு அவற்றிக்குப் பொறுப்பாக முன்னாள் இராணுவ அதிகாரியான பிரிகேடியர் லால் வீரக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
யுத்தம் காரணமாக சொந்த இடங்களை விட்டு வெளியேறிய மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகளை மீள்குடியேற்ற அமைச்சு அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயத்தின் (யு.என்.எச்.சி.ஆர்) உதவியுடன் ஆரம்பித்துள்ளது.
இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில், அங்கு முன்னர் வசித்த மக்கள் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர்.
இந்த மாவட்டங்களில் புதிதாக குடியேற்ற திட்டங்களை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படமாட்டாதெனவும் தெரிவிக்கப்படுகிறது.