முல்லைத்தீவு உடையார் கட்டுக் குளம் பகுதியில் நேற்று செவ்வாய் கிழமை காலை விமானப்படை விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளன.
நேற்றுக் காலை 8.15 மணியளவிலேயே முல்லைத்தீவு,கிளிநொச்சி வீதிக்குச் சமீபமாக உடையார்கட்டுக்குளத்தில் புலிகளின் தலைவர்கள் ஒன்று கூடும் இடம் மீதும் புலிகளின் தலைவர்களது பயிற்சி நிலைகள் மீதும் இந்த தாக்குதல்கள் நடைபெற்றதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
முன்கூட்டியே அடையாளம் காணப்பட்ட நிலைகள் மீதே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் இதில் புலிகளுக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மூன்றுக்கு மேற்பட்ட குண்டு வீச்சு விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளன.