வடமராட்சி நெல்லியடி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
நெல்லியடி கொடிகாமம் வீதியில், கோவில் சந்தைக்கும் அரசடிச் சந்திக்குமிடையில் பற்றரி சார்ச் செய்யபடும் நிலையத்தின் உரிமையாளரே சுட்டுக்கொல்லப்பட்டார்.
காலை 9 மணியளவில் மோட்டார் சைக்கிளொன்றில் வந்தவர்களே அந்த நிலையத்துக்குள் வைத்து அவரைச் சுட்டுக்கொன்று விட்டுச் சென்றாதாக தெரிவிக்கப்படுகிறது.
சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த ஞானேந்திரன் பார்த்திபன் (35 வயது) என்பவரே கொல்லபட்டவராவார். இவரது சடலம் பின்னர் மந்திகைஆஸ்பத்திரியில் ஒப்படைக்கபட்டது.