நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக் கூட்டத்தில் கிழக்கு மாகாண சபையின் மட்டக்களப்பு மாவட்ட ஐ.தே.க. உறுப்பினர் சசிகரன் வீட்டின் மீது ஜூலை 11 ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலைக் கண்டித்தும் உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி கோரியும் மாகாணசபையின் எதிரணியைச் சேர்ந்த ஐ.தே.க. முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்வதையும் அதன் பின்னர் தொடர்ந்து நடந்த அமர்வில் எதிரணியைச் சேர்ந்த ஜே.வி.பி. உறுப்பினர் விமல் பியதிஸ்ஸ தாம் கொண்டு வந்த மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரும் பிரேரணையை முன்மொழிந்து பேசிக்கொண்டிருப்பதையும் எதிரணியினரின் ஆசனங்கள் காலியாக இருப்பதையும் காணலாம்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்த லங்கா சிமெந்து கூட்டுத்தாபனத் தலைவர் எஸ்.ஜே.பரணகமவை வரவேற்கும் நிகழ்வு இணுவிலிலுள்ள லங்கா சிமெந்துக் கூட்டுத்தாபன தற்காலிக அலுவலகத்தில் நடைபெற்றபோது எஸ்.ஜே.பரணகம மங்கல விளக்கேற்றுவதையும் லங்கா சீமெந்துக் கூட்டுத்தாபன ஊழியர்கள் எஸ்.ஜே பரணகமவுடன் நிற்பதையும் இங்கு காணலாம்.