Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, July 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
"இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது மிகவும் சவாலானது'
[23 - July - 2008] [Font Size - A - A - A]
இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது சவாலானது என்று டிராவிட் கூறியுள்ளார்.

இந்திய இலங்கை அணிகளிடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று தொடங்குகிறது.

இந்தநிலையில், இந்திய அணி வீரர் டிராவிட் கொழும்பில் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் கூறியதாவது;

இலங்கை அணியின் 4 அல்லது 5 பந்துவீச்சாளர்களில் மென்டிஸும் ஒருவர். எனவே, அவரை மட்டும் கவனம் செலுத்தக்கூடாது. அந்த அணியில் முரளிதரன், வாஸ் உள்ளிட்ட சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் சேர்ந்து 1000 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றியுள்ளனர். மென்டிஸ் மீது மட்டும் கவனம் செலுத்துவது தவறாகும். சூழ்நிலையைப் பார்த்து அதற்குத் தகுந்தபடி விளையாடுவோம். அவரைப்போல் பல வீரர்களை நாங்கள் சந்தித்திருக்கிறோம். அவர்களுக்கு எதிராக எல்லாம் வெற்றிகரமாக விளையாடியுள்ளோம்.

மலிங்க, மக்ரூப் , பெர்னாண்டோ ஆகியோர் அணியில் இல்லாவிட்டாலும் இலங்கை அணியின் பந்துவீச்சு வலுவாகத்தான் உள்ளது. இலங்கை அணியில் வீரர்கள் சரியான விகிதத்தில் உள்ளனர். சொந்த மண்ணில் அந்த அணி எப்பொழுதுமே சவாலாகத்தான் விளங்கும். முரளிதரன் பந்துவீச்சில் முக்கிய பங்கு வகிப்பார். இந்தச் சூழ்நிலையில் வாஸ் சிறப்பாக பந்து வீசுவார். இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையும் வலுவாக உள்ளது. இங்குள்ள சூழ்நிலையை அவர்கள் சரியாகப் பயன்படுத்துவார்கள். அவர்கள் நீண்ட நேரம் துடுப்பாட்டம் செய்வார்கள்.

நாங்களும் இங்கு வலுவான அணியாகவே வந்திருக்கிறோம். நாங்கள் எங்கள் திறமைக்கு ஏற்ப ஆடினால் இந்த டெஸ்ட் தொடர் சிறப்பாக அமையும். டெஸ்டில் அதிக ஓட்டம் எடுத்த லாராவின் (11,953) சாதனையை முறியடிக்க டெண்டுல்கருக்கு இன்னும் 172 ஓட்டங்களே தேவை. டெண்டுல்கர் உள்ளிட்ட நாங்கள் அனைவரும் டெஸ்ட் தொடரை வெல்வதில் தான் கவனம் செலுத்தி வருகிறோம்.

டெண்டுல்கர் சாதனை இலக்கை இங்கு எட்டுவார் என்று நான் நம்புகிறேன். அவர் முதல் டெஸ்டில் முதல் இனிங்ஸில் சாதனை செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம். முதல் நாளிலேயே சாதனை நடந்தால் அதை பெரியளவில் கொண்டாட முடியும்.

2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாங்கள் இங்கு டெஸ்ட் போட்டியில் ஆடாததால் டெஸ்ட் தொடரை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம். நான் இங்கு சிறப்பாக ஆட விரும்புவேன். இந்த ஆடுகளம் சுழற்பந்துவீச்சு மற்றும் அடித்தாடும் வீரர்களுக்கு உதவியாக இருக்கும். சற்று நிலைத்து நின்று விட்டால் தங்கள் வழக்கமான ஷொட்களை ஆட முடியுமென்றார்.

Email this page Your Opinion Print this page
இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்
சாம்பியன் கிண்ண போட்டியை நடத்த இந்திய உதவியை நாடுகிறது பாகிஸ்தான்
"மென்டிஸின் மணிக்கட்டு அசைவைக் கவனித்தால் அவரது பந்து வீச்சுக்கு இலகுவாக விளையாடலாம்'
இங்கிலாந்துடனான 2 வது டெஸ்ட் தென்னாபிரிக்கா 10 விக்கெட்டால் வெற்றி
"மென்டிஸின் பந்துவீச்சில் குறைபாடுள்ளது அதனை அவர் மேம்படுத்த முயல வேண்டும்'
"இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது மிகவும் சவாலானது'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com