Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, July 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
"மென்டிஸின் பந்துவீச்சில் குறைபாடுள்ளது அதனை அவர் மேம்படுத்த முயல வேண்டும்'
[23 - July - 2008] [Font Size - A - A - A]
இலங்கை வீரர் மென்டிஸின் பந்து வீச்சில் குறைபாடுள்ளதாக அவுஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டெர்ரி ஜென்னர் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும் , ஷேன் வோர்னுக்குப் பயிற்சியளித்தவருமான டெர்ரி ஜென்னர் டெல்லியில் நடைபெறும் சுழற்பந்து பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சியளிக்கிறார்.

இந்தநிலையில், டெர்ரி ஜென்னர் டெல்லியில் அளித்த பேட்டியில்;

எல்லோரது கவனத்தையும் விரைந்து ஈர்த்த இலங்கை இளம் சுழற்பந்து வீச்சாளர் மென்டிஸின் பந்துவீச்சில் குறைபாடிருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார். இது தொடர்பாக டெர்ரி ஜென்னர் கூறியதாவது;

ஒவ்வொரு ஓவரிலும் ஒரு சில பந்துகளை விசேட யுக்தியுடன் வீசும் நுணுக்கத்தை மென்டிஸ் மேம்படுத்த வேண்டும். இந்த மாதிரியான இரகசிய யுக்தி "லெக் பிரேக்' பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். இதுமாதிரி மாயாஜால பந்து வீச்சு மென்டிஸிடம் இல்லை என்று கேள்விப்பட்டேன். அது எனக்கு ஆச்சரியமளிக்கிறது.

உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் ஒரு ஓவரில் சில பந்துகளை விசேடமாக வீசும் இரகசியத்தைத் தங்களிடம் வைத்திருப்பார்கள். அதில் முரளிதரனும் (தூஸ்ரா) ஒருவர். பயிற்சியாளர்கள் வீரர்களுக்கு அடிப்படை நுணுக்கங்களைத் தான் கற்றுக் கொடுக்க முடியும். மாயாஜால வித்தைகளை வீரர்கள் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

முன்பு ஜோன் கிலீசன் பந்து வீசியது போல் தற்போது மென்டிஸ் பந்து வீசுகிறார். மென்டிஸ் சிறந்த பந்துவீச்சாளர் தான். ஆனால், அவரது பந்துவீச்சு அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளில் எடுபடுமா? என்ற சந்தேகம் எனக்குள்ளது. அவரது பந்துவீச்சில் அதிக வித்தியாசத்தைக் காண முடியவில்லை. அவரது விசேட யுக்தியான "கரம்போல்' போதிய தரமாக இல்லை. அவரது பந்து வீச்சில் வேகம் நன்றாக உள்ளது.

மென்டிஸின் திடீர் புகழுக்கு உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் ஓய்வு பெற்று விட்டதும் சிலர் ஓய்வு பெறும் தருவாயில் இருப்பதும் தான் காரணமாகும். வோர்ன், முரளிதரன், கும்பிளே போல் வருங்காலத்தில் மென்டிஸ் வருவார் என்று சொல்வது அவருக்கு கூடுதல் நெருக்கடியைத் தான் கொடுக்கும்.

இந்திய இளம் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா தனது லெக் பிரேக் பந்து வீச்சை மேம்படுத்தினால் உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக வரக்கூடும். அவரிடமும் நிறைய விசேட யுக்தி இல்லை . ஒரு ஓவரில் 2 அல்லது 3 முறைக்கு மேல் அவரால் விசேட முறையில் பந்து வீச முடியவில்லை.

கும்பிளே கடந்த சில வருடங்களாக சிறப்பாக பந்து வீசி வருகிறார். 2003 ஆம் ஆண்டில் அவரை முதல் முறையாக சந்தித்ததுக்கும் தற்போதைக்கும் பந்துவீச்சில் நிறைய வித்தியாசம் ஏற்படுத்தியுள்ளார். முதலில் துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்தும் விதத்தில் செயற்பட்ட அவர் தற்போது விக்கெட்டுகள் வீழ்த்தும் வேலைக்கு மாறியிருக்கிறார். நான் கொடுத்த சில ஆலோசனைகள் அவருக்கு உதவிக்கரமாக இருந்திருக்குமென்று நினைக்கிறேன். வோர்ன், கும்பிளே ஆகியோர் மனதளவில் பெரியவர்கள்.

20 ஓவர் போட்டி சுழற்பந்து வீச்சாளர்களின் திறமையை வளர்க்க வழிவகுக்காது. 20 ஓவர் போட்டியில் பல இளம் சுழற்பந்து வீச்சாளர்கள் ஓட்டங்களைக் கொடுப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வேகமாக பந்து வீசியதை நான் பார்த்தேன். வேகமாக பந்து வீசினால் பந்தை சுழல வைக்க முடியாது. 20 ஓவர் போட்டியில் முதிர்ச்சியடைந்த சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீசுவது தான் பொருந்தும். இளம் வீரர்களுக்கு சரியாக இருக்காதென்றார்.

Email this page Your Opinion Print this page
இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்
சாம்பியன் கிண்ண போட்டியை நடத்த இந்திய உதவியை நாடுகிறது பாகிஸ்தான்
"மென்டிஸின் மணிக்கட்டு அசைவைக் கவனித்தால் அவரது பந்து வீச்சுக்கு இலகுவாக விளையாடலாம்'
இங்கிலாந்துடனான 2 வது டெஸ்ட் தென்னாபிரிக்கா 10 விக்கெட்டால் வெற்றி
"மென்டிஸின் பந்துவீச்சில் குறைபாடுள்ளது அதனை அவர் மேம்படுத்த முயல வேண்டும்'
"இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது மிகவும் சவாலானது'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com