நுகர்வோர் சட்டத்தை மீறும் வர்த்தகர்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சுற்றிவளைப்புக் குழுக்களை மேலும் விஸ்தரிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்து வருகின்றது.
அதிகார சபைக்குச் செய்யப்படும் சகல முறைப்பாடுகளுக்கு எதிராக துரித நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான விஷேட செயற்திட்டம் ஒன்றை தயாரித்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் நரூமி மர்ஸுக் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நுகர்வோர் சட்டத்தை மீறும் வர்த்தகர்கள் தொடர்பான தகவல்களை எந்த நேரமும் அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியும்.
முறைப்பாடுகளை பதிவு செய்வதற்காக நுகர்வோர் விவகார அமைச்சின் முதலாவது மாடியில் தகவல் மத்திய நிலையம் ஒன்றை ஸ்தாபித்துள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிகார சபைக்குச் செய்யப்படும் சகல முறைப்பாடுகள் தொடர்பாகவும் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வர்த்தகர்களை சட்டத்தின் முன்நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை மேலும் மேம்படுத்துவதற்காக சுற்றி வளைப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் நுகர்வோர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.