|
நாடளாவிய ரீதியில் பணிபுரிகின்ற கிராமசேவையாளர்களைப் போலல்லாது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றும் கிராம அலுவலர்கள் பல்வேறு வேலைப்பளுவிற்கும் மத்தியில் கடமையைத் தொடர வேண்டியிருப்பதாகவும் வேறு கிராம சேவகர் பிரிவுகளில் பதில் கடமை மேற்கொள்ள வேண்டி இருப்பதாகவும் அதற்கான வேதனம் பல ஆண்டுகளாக அதிகரிக்கப்படவில்லை என்றும் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள கிராமசேவையாளர் வெற்றிடங்களை நிரப்புமாறு மாகாண கிராம சேவையாளர்கள் சங்கம் உள்நாட்டலுவல்கள் அமைச்சரின் செயலாளரைக் கடித மூலம் கேட்டுள்ளது. தமது வேலைப்பளுவைக் குறைக்கும் நோக்கில் வெற்றிடமாகவுள்ள கிராம சேவையாளர் பதவிக்குப் புதியவர்களை உடனடியாக நியமனம் செய்து உதவுமாறு அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. |