Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, July 31, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
படைத்தளபதியாகவிருந்த போது முறைகேடாக பணம் உழைத்திருந்தால் சகல இடங்களிலும் வீடு வாங்கியிருப்பேன்
[31 - July - 2008] [Font Size - A - A - A]
* முதன்மை வேட்பாளர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா தெரிவிப்பு

அநுராதபுர மாவட்டத்தில் உள்ள எல்லைக் கிராமங்களை பாதுகாப்பதற்கு எனது உயிரையும் துச்சமென மதித்து செயற்பட்டது ஒன்றே இம் மாகாணத்தில் முதலமைச்சராவதற்கு போதுமான தகைமையாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா தெரிவித்தார்.

மிஹிந்தலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் ;

ஒன்றரை வருட காலத்திக்கு முன்பே அரசாங்கம் வடமத்திய மாகாண சபையினைக் கலைத்து தேர்தலை நடாத்த முடிவு செய்தது தாம் செய்த பெரும் பிழை என்பதை தற்போது உணர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு பெருமளவு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளதால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க முன்வந்துள்ளனர். அரசாங்கக் கட்சி என்பதால் அவர்களின் பிரசாரக் கூட்டங்களுக்குச் செல்கின்ற போதும் வாக்களிக்கும் போது நிச்சயமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களிப்போம் என பல நூற்றுக்கணக்கானவர்கள் எம்மிடம் வாக்குறுதி அளித்து வருகின்றனர். நிச்சயமாக அரசாங்கத்துக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு தேர்தலாகவே இம் மாகாண சபைத்தேர்தல் அமையும்.

எனக்கு அநுராதபுரத்தில் வசிக்கக் கூட ஒரு வீடில்லை என்கின்றனர். நான் படைத்தளபதியாக இருக்கும் போது முறைகேடாக பணத்தை உழைத்திருந்தால் அநுராதபுரத்தில் மட்டுமல்ல இலங்கையில் எல்லாப்பாகங்களிலும் வீடுகளை வாங்கியிருக்கலாம். எனினும் நான் யுத்தத்தில் ஈடுபட்டது நாட்டு மக்களுக்காகவே நான் இங்கு வந்தது திரும்பிச் செல்லவல்ல எதிர்வரும் 24 ஆம் திகதி முதலமைச்சரானவுடன் அநுராதபுர மாவட்டத்தின் பிரஜை ஒருவராகிவிடுவேன் .

நான் இராணுவத்திலிருந்த போது யாழ்ப்பாணத்தில் புலிகளினால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் இருந்த நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட படைவீரர்களை காப்பாற்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா எனது தலைமையிலேயே படை ஒன்றை அனுப்பினார்.அதில் நான் வெற்றியும் கண்டேன். இன்று என்னை யார் என்று கேட்கும் அமைச்சர்மார் அன்று என்னை விடுதலை வீரர் எனப்போற்றியவர்கள்.

அதே போன்று வெலிஓயா இராணுவ முகாமைத் தாக்க வந்த இருநூறுக்கு மேற்பட்ட புலிகள் இயக்கத்தினரை கொன்று குவித்து புலிகளுக்கு பாடம் புகட்டியது எனது தலைமையிலான படைவீரர்களே. எனவே எதற்கும் நீங்கள் அஞ்சத் தேவையில்லை. இம்முறை நாமே வெற்றி பெறுவோம் இது நிச்சயம் என்றார்.

Email this page Your Opinion Print this page
இந்திய, பாகிஸ்தான் தலைவர்கள் நாளை வருகை
சார்க் உச்சி மாநாட்டு பாதுகாப்புக்காக நாளை முதல் ஞாயிறு வரை குடாநாட்டுக்கான பயணிகள் விமானசேவை இடைநிறுத்தம்
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கொய்ராலாவை அனுப்ப நேபாளக் கட்சிகள் இணக்கம்
அரசியலுக்கே ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிப்பதில்லை
"யுத்தத்தை தோற்றுவித்தோரே சமாதானத்தை உருவாக்க வேண்டும்'
மீனவர் பிரச்சினை தீர்வுக்கு கொழும்பு செல்லும் இந்திய பிரதமர் அழுத்தம் கொடுக்கவேண்டும்
சார்க்கின் புதிய அவதானிகளாக அவுஸ்திரேலியா, மியான்மார்
சார்க் மகாநாட்டால் இலங்கைக்கு கிடைக்கும் நன்மையை அரசால் பட்டியலிட முடியுமா?
தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை முழுமையாக அமுலாகும் சாத்தியம் இல்லை
கூட்டமைப்பு எம்.பி. கனகசபையின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிச்சூடு
வடபகுதி மோதலில் 4 படையினர் பலி
தொண்டமானுக்கு ஜனாதிபதி மன்னிப்பு
மக்களை வீடுகளிலிருந்து வெளியேற்றியதை எதிர்த்தோருக்கு வெள்ளைவான் அச்சுறுத்தல்
இரணைமடுப் பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
சட்டவிரோத குடியிருப்புகளை எந்த நேரத்திலும் அகற்றும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறது
சார்க் மாநாட்டுக்கு புறம்பாக இந்திய பாகிஸ்தான் தலைவர்கள் சந்திப்பது தொடர்பாக எதுவும் தெரியாது
அமைச்சர்கள் குழு மடுவுக்கு விஜயம் ஆயர் இல்லத்தில் திருச்சொரூபத்தை வழிபட்டனர்
கல்கிசை பகுதியில் தீவிர தேடுதல்
நீதிமன்றம் வந்த மெய்ப்பாதுகாவலர்கள்
சுதந்திர ஊடகஅமைப்பின் பிரதிநிதிகள் வர்த்தக கூட்டமைப்பினருடன் சந்திப்பு
தப்பிவந்த கடற்படை வீரர் பொலிஸாரால் கைது
சிறைக்கூடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் குற்றச்செயல்களை தடுக்க அனைவரும் முன்வரவேண்டும்
குருவிட்டவில் மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு
மாவிட்டபுரம் தேர் உற்சவத்தை முன்னிட்டு தெல்லிப்பழை சோதனைச் சாவடியில் கருமபீடம்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம்
வன்னியில் தொடரும் இராணுவ நடவடிக்கையால் விவசாயிகள், மாணவர்கள் பெரிதும் பாதிப்பு
சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கு இராணுவ வீரருக்கு 14 வருட கடுங்காவல் சிறை
ஆட்டோவில் பயணித்த இருவர் சுட்டுக் கொலை
கரையோர ரயில்களில் சோதனைகள்
நாளை பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை
படையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டும் தேசிய வனத்தில் வேட்டைக்காரர் அதிகரிப்பு
பிபிலை,மெதகமவில் அசுத்தமான குடிநீர் விநியோகிக்கப்படுவதாக விசனம்
உரியவரின் பெயர், முகவரியில்லாத சிம் அட்டைகள் கல்முனை பிரதேசத்தில் பொலிஸாரால் பறிமுதல்
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு இம்முறை 2,03,819 மாணவர்கள் தோற்றவுள்ளனர்
படைத்தளபதியாகவிருந்த போது முறைகேடாக பணம் உழைத்திருந்தால் சகல இடங்களிலும் வீடு வாங்கியிருப்பேன்
வடக்கு கிழக்கு கிராமசேவையாளர் வெற்றிடங்களை நிரப்புமாறு கோரிக்கை
தமிழ் முஸ்லிம் சமூகங்களின் ஐக்கியத்தை சீர்குலைக்கும் அரசியல் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கக்கூடாது
மூன்று சமூகங்களும் ஒற்றுமையுடன் வாழ்வதன் மூலமே கிழக்கு மாகாணத்தில் சமாதானத்தை கட்டியெழுப்ப முடியும்
சார்க் மகாநாட்டின் மூலம் வறிய மக்கள் பயன்பெறும் திட்டமாகவே சார்க் கிராமம் அமைந்துள்ளது
ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட வாய்ப்பிருந்தாலே நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும்
அரசியல் ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சமூகமாக மலையக சமூகம் மாற்றமடைய வேண்டும்
முகத்துவாரம் சங்கமத்தில் இந்துக்கள் பிதிர்க்கடன்களை நிறைவேற்ற அனுமதி
சட்டத்தை மீறும் வர்த்தகர்களுக்கெதிராக சுற்றிவளைப்புக் குழுக்கள் அதிகரிப்பு
கந்தளாய் சீனித் தொழிற்சாலையை மீண்டும் திறக்குமாறு ஜே.வி.பி. அரசிடம் கோரிக்கை
தனிநபர் விடும் தவறு ஒரு நிறுவனத்தையே தோல்விக்கு இட்டுச்செல்வதை விளக்கும் படம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com