கல்முனை பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக பொலிஸாரினால் கையடக்கத் தொலைபேசிகளின் சிம் அட்டைகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. உரியவரின் பெயர் முகவரி இல்லாத சகல சிம் அட்டைகளும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் புதிய சட்டதிட்டங்களுக்கு அமைய உரியவர்களின் முகவரியிலும் பெயரிலும் பதிவு செய்யப்படாத சிம் அட்டைகளை ஏனையயோர் பாவிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
கல்முனையிலிருந்து அம்பாறை நோக்கி செல்கின்ற பயணிகளில் பலர் மல்வத்தை மற்றும் உதயபுர போன்ற சோதனைச்சாவடிகளில் சோதனைக்குட்படுத்தப்பட்டு உரியவர்களின் பெயரில் பதிவுசெய்யப்படாத பெரும்பாலானவர்களின் சிம் அட்டைகள் கடந்த சில தினங்களாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேநேரம், கையடக்கத் தொலைபேசிகளை தமது சொந்த பெயரில் பதிவுசெய்யாமல் பாவிக்கின்ற பாவனையாளர்களின் நன்மை கருதி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கல்முனையில் பதிவு செயவதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாவனையாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.