மொனராகலை, பிபிலை ,மெதகம ஆகிய இடங்களில் விநியோகிக்கப்படும் குடிநீர் அசுத்தமானதென்று இந் நீரில் " இகோய்' எனும் பக்ரீரியா கலந்திருப்பதாக தெரியவருகிறது
இக் குடிநீரைப் பெறும் நீர் ஊற்றுகள் அனைத்தும் இறப்பர் தோட்டங்களைச் சார்ந்த பகுதிகளிலேயே அமைந்துள்ளன. அங்கு வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் இந் நீரை அசுத்தப்படுத்துவதாலேயே, இந் நிலை ஏற்பட்டிருப்பதாக மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் தியக் சிரிவர்த்தன தெரிவித்தார்.
இது தொடர்பாக ஏற்கனவே புகார் செய்யப்பட்டிருந்தமையால் இந் நீரை பரிசோதனை செய்யும் பெருட்டு கொழும்பு பல்கலைக்கழக நீர் ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
அதன்படி கிடைக்கப்பெற்ற பரிசோதனை அறிக்கையில், நீர் அசுத்தம் நிறைந்திருப்பது ""இகோய்' என்று அழைக்கப்படும் பக்ரீரியா கலந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.அபாயம் எதிர்நோக்கப்பட்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையினால் ,மேற்படி நீர் ஊற்றுகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக தோட்டத் தொழிலாளர்களை அறிவுறுத்தும் வேலைத்திட்டங்களும் மொனராகலை மாவட்ட சுகாதாரசேவை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.