தமிழ் மற்றும் சிங்கள மொழிமூல அரச பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான விடுமுறை நாளை வெள்ளிக்கிழமை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
மூன்றாம் தவணை செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி வழங்கப்பட்டு மூன்றாம் தவணை அக்டோபர் மாதம் 6 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.