சார்க்' உச்சி மாநாட்டையடுத்து கரையோர ரயில்களில் பயணம் செய்பவர்கள் கடுமையானச் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகள் ரயில்களில் ஏறுவதற்கு முன்பு சோதனையிடப்படுகின்றனர்.
இதேபோல தூர இடங்களுக்கு சேவையிலீடுபடும் பஸ்களின் பயணிகளும் பொதிகளும் தீவிர சோதனைக்குட்படுத்தப்படுவதையும் காணமுடிகிறது.
கரையோர ரயில்களில் குறைவான பயணிகள் தற்போது பயணம் செய்கின்றனர்.
மாத்தறையில் இருந்து கொழும்புக்கு அப்பால் செல்லும் ரயில் சேவைகள் பம்பலப்பிட்டியுடன் நிறுத்தப்படுவதால், இவற்றில் பயணம் செய்பவர்கள் குறைந்துள்ளனர்.