மாவறல்ல சீனிப்பல்ல பகுதியில் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என மாவறல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ தினம் இரவு ஆட்டோவில் இருவர் பயணம் செய்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர்களின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இருவரில் ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர் ஆஸ்பத்திரியில் படுகாயத்துடன் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமானார்.
இருவரும் ஒன்று விட்ட சகோதரர்கள் எனத் தெரிவித்த பொலிஸார் இது பழைய தகராறு காரணமாக ஏற்பட்ட சம்பவம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர் வீ.குமர (வயது 20), சமன்புஸ்ப குமார (20 வயது) ஆகிய இருவருமே இச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களாவர்.