|
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 6 ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இருபத்தைந்துதினங்கள் நடைபெறவுள்ளது.உற்சவத்தையொட்டிய சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக யாழ்.மாநகரசபை ஆணையாளர் மு.செ. சரவணபவ தெரிவித்துள்ளார். முக்கிய உற்சவமான மஞ்சத்திருவிழா 15 ஆம் திகதியும், கைலாசவாகன திருவிழா 25 ஆம் திகதியும் சப்பரத்திருவிழா 28 ஆம் திகதியும் இடம்பெறும். தேர் உற்சவம் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் மறுநாள் தீர்த்தோற்சவமும் இடம்பெறும். |