கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகளுக்கான கற்கை நிலையமானது இன்றும் நாளையும் குருவிட்ட, ஹோட்டல் அரலியாவில் பெருந்தோட்டத்தில் கடமையாற்றும் சிறுவர் பராமரிப்பாளர்களுக்கு இரண்டு நாள் வதிவிட செயலமர்வொன்றை நடத்தத் தீர்மானித்துள்ளது.
தமிழ் மொழி மூலமாக நடைபெறுவதுடன், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள், சிறுவர் உரிமைகள், பெண்களின் உரிமைகள், வேலையாட்களின் உரிமைகள், சுகாதாரம் தொடர்பான உரிமைகள் மற்றும் பிரஜைகளின் கடமைகள், பொறுப்புகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.
இதில் 45 உத்தியோகத்தர்கள் பங்குபற்றுவதுடன், இவ் நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் பெருந்தோட்டத்துறைசார் அலுவலர்களுக்கும் பிரஜைகளுக்கும் உரிமைகள், கடமைகள், பொறுப்புகள் தொடர்பான அறிவூட்டலை வழங்குவதாகும்.
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்டபீட விரிவுரையாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இவ் நிகழ்ச்சிக்கு வளவாளர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.