கடற்படையில் இருந்து தப்பியோடிவந்த சிப்பாய் ஒருவரை திக்குவல்ல பொலிஸார் பிடித்துள்ளனர். இவர் மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2006 ஆம் ஆண்டு கடற்படையில் இருந்து தப்பிவந்த இவர் பொலிஸாரால் பிடிக்கப்பட்டு மீண்டும் கடற்படைக்கு கொண்டு செல்லப்படும்போது வாகனத்தில் இருந்து தப்பியோடியுள்ளார்.
திக்குவல்ல வத்தேகம பகுதியில் இவர், மறைந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் இவரைக் கைது செய்துள்ளதாக திக்குவல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.எம்.எஸ்.கல்தேரா தெரிவித்தார்.
மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டபோது, கடற்படைத் தலைமையகத்துடன் தொடர்புகொண்டு இவரை அனுப்பிவைக்குமாறும் அதுவரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.