கல்கிசைப் பகுதியில் நேற்று புதன்கிழமை காலை முதல் பாரிய தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
காலை 6 மணிக்கு கல்கிசை, இரத்மலானை மற்றும் கட்டுப்பெத்தை பகுதியில் ஆரம்பமான இந்தத் தேடுதல் முற்பகல் பத்து மணிவரை நீடித்தது.
மோப்ப நாய்கள் சகிதம் நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்காவல் படையினரும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பொலிஸாரும் இணைந்தே இந்தத் தேடுதலை நடத்தியுள்ளனர்.
இதன் போது கொழும்பு நோக்கி வந்த அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குள்ளாக்கப்பட்டன. இதில் 500க்கும் மேற்பட்ட வாகனங்களைச் சோதனையிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் நாய்கள் மற்றும் வெடி பொருட்களைக் கண்டு பிடிக்கும் கருவிகளைப் பயன்படுத்தி பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் தேடுதல்களை நடத்தியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்தத் தேடுதலின் போது 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களை அடையாளப்படுத்தக் கூடிய உரிய ஆவணங்களை வைத்திருக்கவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.