Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, July 31, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
சட்டவிரோத குடியிருப்புகளை எந்த நேரத்திலும் அகற்றும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறது
[31 - July - 2008] [Font Size - A - A - A]
* உயர்நீதிமன்றம் அறிவிப்பு

கொழும்பு கொம்பனிவீதி கிளனி ஒழுங்கையில் ரயில் பாதையின் இரு மருங்கிலுமுள்ள சட்டவிரோத குடியிருப்புகளை எந்நேரத்திலும் அங்கிருந்து அகற்றுவதற்கான அதிகாரம் அரசுக்குள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சார்க் மாநாட்டு பாதுகாப்பை முன்னிட்டு கிளனி ஒழுங்கையிலுள்ள மக்கள் குடியிருப்புகளை அப்புறப்படுத்துவதற்கு கடந்த வார முற்பகுதியில் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை விதித்திருந்தபோதும், பொலிஸாரின் உதவியுடன் நகர அபிவிருத்தி அதிகார சபை தகர்த்தழித்தது.

இந்த நிலையில் கிளனி ஒழுங்கையைச் சேர்ந்த சிலர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பாக நேற்று உயர்நீதிமன்றில் பரிசீலனை செய்யப்பட்டது.

இதன்போதே, இங்குள்ள சட்டவிரோத குடியிருப்புகளை அரசு எந்நேரத்திலும் அங்கிருந்து அகற்றுவதற்கான அதிகாரம் அரசுக்கு உள்ளதாக உயர்நீதிமன்ற நீதியரசர்களான அசோக டி சில்வா, சலீம் மர்சூக், பி.ஏ.ஏக்கநாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதனால் அடுத்த மாதம் 19 ஆம் திகதிக்கு முன் இந்தப் பகுதி மக்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் கலந்துரையாடி பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமெனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், இப்பகுதி மக்களை அப்புறப்படுத்துவதற்கான சட்டத்தை பயன்படுத்தாது, குண்டர்களின் உதவிகளைப் பெற இடமளிக்கக்கூடாதென மனுதாரர்களின் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி உப்புல் ஜெயசூரிய தெரிவித்தார்.

இதேநேரம், இவர்களுக்கு மாற்று இருப்பிடம் வழங்க அரசு தீர்மானித்துள்ளதாகவும் அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அரசு தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி பாலித ரணசிங்க தெரிவித்தார்.

குடியிருப்பாளர்களுக்கு தெமட்டகொட பகுதியில் குடியிருப்புப் பகுதிகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை உறுதிசெய்து அவர்களுக்கான குடியிருப்புகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசு தரப்பு சட்டத்தரணிக்கு உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியது.

Email this page Your Opinion Print this page
இந்திய, பாகிஸ்தான் தலைவர்கள் நாளை வருகை
சார்க் உச்சி மாநாட்டு பாதுகாப்புக்காக நாளை முதல் ஞாயிறு வரை குடாநாட்டுக்கான பயணிகள் விமானசேவை இடைநிறுத்தம்
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கொய்ராலாவை அனுப்ப நேபாளக் கட்சிகள் இணக்கம்
அரசியலுக்கே ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிப்பதில்லை
"யுத்தத்தை தோற்றுவித்தோரே சமாதானத்தை உருவாக்க வேண்டும்'
மீனவர் பிரச்சினை தீர்வுக்கு கொழும்பு செல்லும் இந்திய பிரதமர் அழுத்தம் கொடுக்கவேண்டும்
சார்க்கின் புதிய அவதானிகளாக அவுஸ்திரேலியா, மியான்மார்
சார்க் மகாநாட்டால் இலங்கைக்கு கிடைக்கும் நன்மையை அரசால் பட்டியலிட முடியுமா?
தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை முழுமையாக அமுலாகும் சாத்தியம் இல்லை
கூட்டமைப்பு எம்.பி. கனகசபையின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிச்சூடு
வடபகுதி மோதலில் 4 படையினர் பலி
தொண்டமானுக்கு ஜனாதிபதி மன்னிப்பு
மக்களை வீடுகளிலிருந்து வெளியேற்றியதை எதிர்த்தோருக்கு வெள்ளைவான் அச்சுறுத்தல்
இரணைமடுப் பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
சட்டவிரோத குடியிருப்புகளை எந்த நேரத்திலும் அகற்றும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறது
சார்க் மாநாட்டுக்கு புறம்பாக இந்திய பாகிஸ்தான் தலைவர்கள் சந்திப்பது தொடர்பாக எதுவும் தெரியாது
அமைச்சர்கள் குழு மடுவுக்கு விஜயம் ஆயர் இல்லத்தில் திருச்சொரூபத்தை வழிபட்டனர்
கல்கிசை பகுதியில் தீவிர தேடுதல்
நீதிமன்றம் வந்த மெய்ப்பாதுகாவலர்கள்
சுதந்திர ஊடகஅமைப்பின் பிரதிநிதிகள் வர்த்தக கூட்டமைப்பினருடன் சந்திப்பு
தப்பிவந்த கடற்படை வீரர் பொலிஸாரால் கைது
சிறைக்கூடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் குற்றச்செயல்களை தடுக்க அனைவரும் முன்வரவேண்டும்
குருவிட்டவில் மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு
மாவிட்டபுரம் தேர் உற்சவத்தை முன்னிட்டு தெல்லிப்பழை சோதனைச் சாவடியில் கருமபீடம்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம்
வன்னியில் தொடரும் இராணுவ நடவடிக்கையால் விவசாயிகள், மாணவர்கள் பெரிதும் பாதிப்பு
சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கு இராணுவ வீரருக்கு 14 வருட கடுங்காவல் சிறை
ஆட்டோவில் பயணித்த இருவர் சுட்டுக் கொலை
கரையோர ரயில்களில் சோதனைகள்
நாளை பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை
படையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டும் தேசிய வனத்தில் வேட்டைக்காரர் அதிகரிப்பு
பிபிலை,மெதகமவில் அசுத்தமான குடிநீர் விநியோகிக்கப்படுவதாக விசனம்
உரியவரின் பெயர், முகவரியில்லாத சிம் அட்டைகள் கல்முனை பிரதேசத்தில் பொலிஸாரால் பறிமுதல்
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு இம்முறை 2,03,819 மாணவர்கள் தோற்றவுள்ளனர்
படைத்தளபதியாகவிருந்த போது முறைகேடாக பணம் உழைத்திருந்தால் சகல இடங்களிலும் வீடு வாங்கியிருப்பேன்
வடக்கு கிழக்கு கிராமசேவையாளர் வெற்றிடங்களை நிரப்புமாறு கோரிக்கை
தமிழ் முஸ்லிம் சமூகங்களின் ஐக்கியத்தை சீர்குலைக்கும் அரசியல் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கக்கூடாது
மூன்று சமூகங்களும் ஒற்றுமையுடன் வாழ்வதன் மூலமே கிழக்கு மாகாணத்தில் சமாதானத்தை கட்டியெழுப்ப முடியும்
சார்க் மகாநாட்டின் மூலம் வறிய மக்கள் பயன்பெறும் திட்டமாகவே சார்க் கிராமம் அமைந்துள்ளது
ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட வாய்ப்பிருந்தாலே நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும்
அரசியல் ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சமூகமாக மலையக சமூகம் மாற்றமடைய வேண்டும்
முகத்துவாரம் சங்கமத்தில் இந்துக்கள் பிதிர்க்கடன்களை நிறைவேற்ற அனுமதி
சட்டத்தை மீறும் வர்த்தகர்களுக்கெதிராக சுற்றிவளைப்புக் குழுக்கள் அதிகரிப்பு
கந்தளாய் சீனித் தொழிற்சாலையை மீண்டும் திறக்குமாறு ஜே.வி.பி. அரசிடம் கோரிக்கை
தனிநபர் விடும் தவறு ஒரு நிறுவனத்தையே தோல்விக்கு இட்டுச்செல்வதை விளக்கும் படம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com