கிளிநொச்சி இரணைமடுப் பகுதியில் நேற்று புதன்கிழமை காலை விமானப்படை விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளன.
கிளிநொச்சிக்கு தென்கிழக்கே இரணைமடுப் பகுதியிலுள்ள கரும்புலிகளின் நிலைகள் மீதே நேற்றுக்காலை 6.35 மணியளவில் இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக விமானப் படையினர் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தாக்குதலில் கரும்புலிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் தாக்குதலையடுத்து அந்தப் பகுதியிலிருந்து தீப்பிழம்புகள் எழுந்ததை விமானிகள் அவதானித்ததாகவும் விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.
தொடர்ச்சியான வான் வழி மற்றும் தரை வழிக் கண்காணிப்பையடுத்தே இந்த முகாம் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டு அது அழிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.