வவுனியா மற்றும் மன்னார் பகுதியில் கடும் மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இந்தப் பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் நான்கு படையினர் கொல்லப்பட்டும் எட்டுப் படையினர் காயமடைந்துள்ளதாகவும் படைத் தரப்பு தெரிவித்துள்ளது.
துணுக்காய்க்குத் தெற்கே செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.45 மணியளவில் நடைபெற்ற மோதலில் இரு படையினர் கொல்லப்பட்டதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.
கல்விளான் பகுதியில் நடைபெற்ற மோதலில் இரு படையினர் காயமடைந்துள்ளனர்.
மன்னார் வெள்ளாங்குளத்திற்குத் தெற்கே பிற்பகல் 2.45 மணியளவில் நடைபெற்ற மோதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், நான்கு படையினர் காயமடைந்துள்ளனர்.
இதேநேரம், கல்மடு பகுதியில் நடைபெற்ற மோதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.
இப்பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகள் தரப்பில் 15 பேர் வரை கொல்லப்பட்டதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.