Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, July 31, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மீனவர் பிரச்சினை தீர்வுக்கு கொழும்பு செல்லும் இந்திய பிரதமர் அழுத்தம் கொடுக்கவேண்டும்
[31 - July - 2008] [Font Size - A - A - A]
*சென்னையில் இலங்கை தூதரகம் முற்றுகை; ஆயிரக்கணக்கானோர் கைது

இலங்கைத் தமிழர் பிரச்சினையை தீர்ப்பதனூடாகவே இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமென்பதை வலியுறுத்தியும் கொழும்பில் நடைபெறும் சார்க் மாநாட்டில் இந்தியப் பிரதமர் இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனக் கோரியும் சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா உட்பட ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

நேற்று புதன்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன் "தினக்குரல்'க்கு தெரிவித்ததாவது;

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தினமும் சுட்டுப் படுகொலை செய்யப்படுகின்றனர். இதனைத் தடுத்து நிறுத்துமாறு நாம் பல போராட்டங்களை நடத்திவிட்டோம். ஆனால், மத்திய அரசு இது தொடர்பில் கவனம் எடுக்காததால் இலங்கை கடற்படை தனது வேட்டையை தொடர்கிறது.

தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டுமானால் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இதனை வலியுறுத்தியும் கொழும்பில் நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கைத் தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பில் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்தியுமே இந்த முற்றுகைப் போராட்டத்தை நடத்தினோம்.

சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு அவர்கள் எவரையும் வெளியே வரவிடாது தடுப்பதே எமது போராட்டத்தின் நோக்கமாகும். எமது முற்றுகைப் போராட்ட அழைப்பையேற்று ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா, செயலாளர் தா.பாண்டியன், துணைச் செயலாளராகிய நான், நல்லகண்ணு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களான சிவு புண்ணியம், குணசேகரன், ராமசாமி, பத்மாவதி, உலகநாதன் உட்பட பெருமளவானோர் இந்தப் போராட்டத்தில் பங்குபற்றினார்கள்.

எமது போராட்ட அறிவிப்பையடுத்து தமிழக அரசு பொலிஸார் மூலம் இலங்கைத் தூதரகத்தை சுற்றி கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ததுடன், எம்மை நுழையவிடாதவாறு தடைகளையும் ஏற்படுத்தியது. இதனால் எமக்கும் பொலிஸாருக்குமிடையே இழுபறிகளும் கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது. இந்நிலையில், அங்கு திரண்டிருந்த பொலிஸார் எம் அனைவரையும் கைது செய்தனர்.

அதன் பின்னர் பொது இடமொன்றில் எம்மை தடுத்துவைத்துவிட்டு விடுதலை செய்துவிட்டனர். ஆனாலும், இலங்கைத் தமிழர்களுக்காகவும் தமிழக மீனவர்களுக்காகவும் நாம் எமது போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளோம்.

இரு நாடுகளுக்கும் சொந்தமான கடலை இலங்கை தனது இராணுவ நடவடிக்கைகளுக்காக பாவிப்பதை ஒருபோதும் எம்மால் அனுமதிக்க முடியாது. நாம் இலங்கைத் தமிழர்களுடன் தொப்புள் கொடி உறவை வைத்துள்ளவர்கள்.

முன்னர் அவர்களுடனான திருமண பந்தங்கள் கூட எம்மிடையே உண்டு. அப்போது இலங்கை இந்தியாவிடையேயான கடல் எல்லை பிரிக்கப்படவில்லை. ஆனால், இப்போது இலங்கையரசு தனது இராணுவ நடவடிக்கைகளுக்காக கடலைப் பயன்படுத்துகிறது.

தமிழக மீனவர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமானால் இலங்கைத் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இதனையே நாம் இந்தியப் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

Email this page Your Opinion Print this page
இந்திய, பாகிஸ்தான் தலைவர்கள் நாளை வருகை
சார்க் உச்சி மாநாட்டு பாதுகாப்புக்காக நாளை முதல் ஞாயிறு வரை குடாநாட்டுக்கான பயணிகள் விமானசேவை இடைநிறுத்தம்
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கொய்ராலாவை அனுப்ப நேபாளக் கட்சிகள் இணக்கம்
அரசியலுக்கே ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிப்பதில்லை
"யுத்தத்தை தோற்றுவித்தோரே சமாதானத்தை உருவாக்க வேண்டும்'
மீனவர் பிரச்சினை தீர்வுக்கு கொழும்பு செல்லும் இந்திய பிரதமர் அழுத்தம் கொடுக்கவேண்டும்
சார்க்கின் புதிய அவதானிகளாக அவுஸ்திரேலியா, மியான்மார்
சார்க் மகாநாட்டால் இலங்கைக்கு கிடைக்கும் நன்மையை அரசால் பட்டியலிட முடியுமா?
தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை முழுமையாக அமுலாகும் சாத்தியம் இல்லை
கூட்டமைப்பு எம்.பி. கனகசபையின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிச்சூடு
வடபகுதி மோதலில் 4 படையினர் பலி
தொண்டமானுக்கு ஜனாதிபதி மன்னிப்பு
மக்களை வீடுகளிலிருந்து வெளியேற்றியதை எதிர்த்தோருக்கு வெள்ளைவான் அச்சுறுத்தல்
இரணைமடுப் பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
சட்டவிரோத குடியிருப்புகளை எந்த நேரத்திலும் அகற்றும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறது
சார்க் மாநாட்டுக்கு புறம்பாக இந்திய பாகிஸ்தான் தலைவர்கள் சந்திப்பது தொடர்பாக எதுவும் தெரியாது
அமைச்சர்கள் குழு மடுவுக்கு விஜயம் ஆயர் இல்லத்தில் திருச்சொரூபத்தை வழிபட்டனர்
கல்கிசை பகுதியில் தீவிர தேடுதல்
நீதிமன்றம் வந்த மெய்ப்பாதுகாவலர்கள்
சுதந்திர ஊடகஅமைப்பின் பிரதிநிதிகள் வர்த்தக கூட்டமைப்பினருடன் சந்திப்பு
தப்பிவந்த கடற்படை வீரர் பொலிஸாரால் கைது
சிறைக்கூடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் குற்றச்செயல்களை தடுக்க அனைவரும் முன்வரவேண்டும்
குருவிட்டவில் மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு
மாவிட்டபுரம் தேர் உற்சவத்தை முன்னிட்டு தெல்லிப்பழை சோதனைச் சாவடியில் கருமபீடம்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம்
வன்னியில் தொடரும் இராணுவ நடவடிக்கையால் விவசாயிகள், மாணவர்கள் பெரிதும் பாதிப்பு
சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கு இராணுவ வீரருக்கு 14 வருட கடுங்காவல் சிறை
ஆட்டோவில் பயணித்த இருவர் சுட்டுக் கொலை
கரையோர ரயில்களில் சோதனைகள்
நாளை பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை
படையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டும் தேசிய வனத்தில் வேட்டைக்காரர் அதிகரிப்பு
பிபிலை,மெதகமவில் அசுத்தமான குடிநீர் விநியோகிக்கப்படுவதாக விசனம்
உரியவரின் பெயர், முகவரியில்லாத சிம் அட்டைகள் கல்முனை பிரதேசத்தில் பொலிஸாரால் பறிமுதல்
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு இம்முறை 2,03,819 மாணவர்கள் தோற்றவுள்ளனர்
படைத்தளபதியாகவிருந்த போது முறைகேடாக பணம் உழைத்திருந்தால் சகல இடங்களிலும் வீடு வாங்கியிருப்பேன்
வடக்கு கிழக்கு கிராமசேவையாளர் வெற்றிடங்களை நிரப்புமாறு கோரிக்கை
தமிழ் முஸ்லிம் சமூகங்களின் ஐக்கியத்தை சீர்குலைக்கும் அரசியல் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கக்கூடாது
மூன்று சமூகங்களும் ஒற்றுமையுடன் வாழ்வதன் மூலமே கிழக்கு மாகாணத்தில் சமாதானத்தை கட்டியெழுப்ப முடியும்
சார்க் மகாநாட்டின் மூலம் வறிய மக்கள் பயன்பெறும் திட்டமாகவே சார்க் கிராமம் அமைந்துள்ளது
ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட வாய்ப்பிருந்தாலே நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும்
அரசியல் ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சமூகமாக மலையக சமூகம் மாற்றமடைய வேண்டும்
முகத்துவாரம் சங்கமத்தில் இந்துக்கள் பிதிர்க்கடன்களை நிறைவேற்ற அனுமதி
சட்டத்தை மீறும் வர்த்தகர்களுக்கெதிராக சுற்றிவளைப்புக் குழுக்கள் அதிகரிப்பு
கந்தளாய் சீனித் தொழிற்சாலையை மீண்டும் திறக்குமாறு ஜே.வி.பி. அரசிடம் கோரிக்கை
தனிநபர் விடும் தவறு ஒரு நிறுவனத்தையே தோல்விக்கு இட்டுச்செல்வதை விளக்கும் படம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com