"யுத்தத்தை உருவாக்கியோரே சமாதானத்தையும் தோற்றுவிக்க வேண்டும்' என்று ஐ.நா. சமாதான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பதவி விலகும் பிரதிச் செயலாளர் நாயகம் ஜேன்மேரி கைகென்னோ கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட தரப்பினரின் இதயசுத்தியுடனான அரசியல் விருப்பமே முரண்பாட்டுக்கு தீர்வைத் தேடித் தரும். ஐ.நா. சமாதானப் படையினர் அதனைத் தேடித் தருவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
யுத்தத்தை ஏற்படுத்தியவர்களாலேயே சமாதானத்தை உருவாக்க முடியும். உங்களால் அவர்களுக்கு உதவ முடியும். யுத்தத்தில்
களைப்படைந்த தருணத்தில் உங்களால் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். அதாவது, நல்ல நோக்கத்துக்கான நம்பிக்கையைத் தோற்றுவிக்க முடியும். இதுவே ஐ.நா. சமாதானப் படை மேற்கொள்ள வேண்டிய பணியாகும்.
ஐ.நா.வால் பலவந்தமாக சமாதானத்தை உருவாக்க முடியாது என்றும் ஜேன்மேரி கூறியுள்ளார். அவரின் இடத்திற்கு பிரான்ஸைச் சேர்ந்த அலெய்ன்லீ ரோய் நியமிக்கப்பட்டுள்ளார்.