அம்பாறை மாவட்டத்தில் கடற்கோள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் வயோதிபர்களுக்கென இலவச வைத்திய சேவைகளை அரச சார்பற்ற நிறுவனமான ஹெல்பேச் அமைப்பு நிந்தவூர் பிரதேசத்தில் மேற்கொண்டு வருகின்றது.
இந்த இலவச வைத்திய சேவை அல்ஹாஜ் கே.எல். காதர் ஞாபகார்த்த சுகாதார சேவை நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற போது தெரிவு செய்யப்பட்ட 50 வயோதிப நோயாளிகளுக்கு மருந்துகளும் சத்துணவுகளும் வழங்கப்பட்டதுடன், 10 வயோதிபர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளும் விநியோகிக்கப்பட்டன.
இந்த இலவச வைத்திய சேவை முகாமில் டாக்டர் ஏ.எம்.ஹம்மாம் மற்றும் கண் பரிசோதகர் சாந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டதுடன் இவ்வாறான வைத்திய முகாம் அம்பாறை மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் தொடர்ச்சியாக நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் ஹெல்பேச் நிறுவன முக்கியஸ்தர் தெரிவித்தார்.