நாவாலி அட்டகிரி முருகமூர்த்தி கோயிலுக்கு சமீபமாகவுள்ள வயல் கிணற்றில் நேற்று வியாழக்கிழமை காலை தவறி வீழ்ந்த மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மானிப்பாய் இந்துக் கல்லூரி மாணவனான மானிப்பாய் சோதி வேம்படி ஒழுங்கையைச் சேர்ந்த பஞ்சலிங்கம் பகீரதன் (வயது18) என்பவரே உயிரிழந்தவராவார்.
நேற்றுக் காலை 8 மணியளவில் இவர் தனது சகோதரனுடன் துவிச்சக்கர வண்டியில் வயல் பகுதிக்கு மாடு கட்டுவதற்காகச் சென்றபோது கிணற்றுக் கட்டில் சைக்கிளை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கும்போதே தவறிக் கிணற்றினுள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்தில் விசாரணைகளை நடத்திய மல்லாகம் நீதிமன்ற மேலதிக நீதிவான் அன்றோ அமலவான் ஆனந்தராஜா மரணவிசாரணைகளை நடத்திய பின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.