Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, September 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
சட்ட உதவி நிலையங்களூடாக வறிய மக்கள் நன்மையடைய முடியும்
[05 - September - 2008] [Font Size - A - A - A]
* பிரதியமைச்சர் புத்திரசிகாமணி

-ரொஷான் நாகலிங்கம்-

நியாயத்தை சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றத்தில் முன்வைத்து நீதியை பெறமுடியாதவர்களுக்கு சட்ட உதவி நிலையம் மூலம் நன்மைகளைப் பெறமுடியுமென நீதி சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ.புத்திரசிகாமணி தெரிவித்தார்.

கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் சட்ட உதவி நிலையத்தை நேற்று வியாழக்கிழமை மாலை திறந்து வைத்துப் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்;

நீதிமன்றங்களில் ஏழை மக்கள் தமது நியாயப்பாடுகளை முன்வைத்து தாம் குற்றவாளிகள் அல்ல. சுற்றவாளிகள் என்பதை வெளிப்படுத்த முடியாமலுள்ளனர். இதற்குக் காரணம் வழக்கறிஞர்களுக்கான கட்டணத்தை செலுத்த முடியாததன் நிமிர்த்தம் அவர்கள் நீதிமன்றங்களில் வாதாடுவதற்கு முன்வராமையேயாகும்.

நான் அண்மையில் பதுளை சிறைச்சாலைக்கு சென்றேன். அங்கிருக்கும் பலருடன் கதைத்தேன். இவர்கள் தமது நியாயப்பாடுகளை முன்வைக்காமையினால் சிறைவாசம் அனுபவிப்பதாக தெரிவித்தனர். அவர்களது கதையை கேட்கும்போது வேதனையாகவுள்ளது. இதுபோன்று பலர் தமது நியாயப்பாடுகளை முன்வைக்காத சுற்றவாளிகள் சிறைவாசம் அனுபவிக்கின்றனர். இந்த நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும்.

குறிப்பாக தமிழ் மக்கள் மொழிப் பிரச்சினை காரணமாக தமது பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துரைக்க முடியாதுள்ளனர். உதாரணமாக பிரபாகரனின் கடந்த வருட பிறந்த தினத்தன்று பதுளையிலிருந்து கொழும்புக்கு வந்த இரு இளைஞர்கள் கொழும்பில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.

இதற்கு காரணம் அவர்களுக்கு பிரபாகரன் என்று பெயர் உள்ளதேயாகும். எனினும் அவர்களுக்கு பிரபாகரனுடன் எந்தத் தொடர்போ சம்பந்தமோ இல்லாத நிலையில் பல மாதங்களாக சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.

இவர்களை முழுமையாக விசாரித்து தீர்ப்பு வழங்கியிருந்தால் வெளியிலிருப்பர். இந்த சிக்கலான நிலையை மாற்றியமைக்கவும் ஏழைகளுக்கு சட்ட ரீதியான உதவியை வழங்குவதற்குமே நாடு பூராகவும் சட்ட உதவி நிலையங்கள் திறந்து வைக்கப்படுகின்றன.

இதேவேளை, நீதிவான்களுக்கும் சட்டத்தரணிகளுக்குமிடையில் வழக்காடும்போது உரையாடுவது தொடர்பில் புரியாத நிலை காணப்படுகிறது. இந்த நிலைமையை மாற்றியமைத்து மக்களுக்கு அடிப்படை சட்டத்தை புரிந்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று கல்கிசை நீதிமன்றத்தில் திறக்கப்படும் இந்த சட்ட உதவி நிலையம் மூலம் சட்டத்தரணிகளை ஏற்பாடு செய்ய முடியாதவர்கள் இங்கு நன்மைகளை பெற்றுக்கொடுக்க முடியும். படிப்படியாக இவ்வாறான நிலையங்களை ஏனைய இடங்களிலும் அமைக்கவுள்ளோம் என்றார்.

Email this page Your Opinion Print this page
ஐ.ஈ.எல்.ரி.எஸ். பரீட்சைக்கான பதிவுகளை இலகுவாக்கியது பிரிட்டிஷ் கவுன்ஸில்
காணாமற் போனவர்கள் மீண்டும் திரும்பி வருவரென நம்பிக்கை
வன்னி அகதிகளின் நிலைமை; மனித உரிமைகளுக்கான புத்திஜீவிகள் கவலை
வடக்கில் விரைவில் தேர்தலின்பின் மாகாண சபை அரசியல் நிர்வாகம்
வன்னி மக்களின் பாதுகாப்பு, சுதந்திரமான நடமாட்டத்துக்கு இடமளிக்க வலியுறுத்தல் மனிதாபிமான அமைப்புகளின் இணையம் வேண்டுகோள்
யாழ்நகரில் மீண்டும் கொள்ளையர் அட்டகாசம்
மண்சரிவில் புதையுண்ட இரு தொழிலாளர்கள்
கிராண்ட்பாஸ் முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிலைகளை அடித்து நொருக்கி அட்டகாசம்
பணவீக்கம் என்றுமில்லாதவாறு அதிகரிப்பு ஒவ்வொரு பிரஜையும் ரூபா 1,75,000 கடனாளி
இந்துக் கோவில் சுவாமி சிலைகளை உடைத்த பிக்கு மீது ஜனாதிபதி, அஸ்கிரிய பீடாதிபதிகளின் நடவடிக்கை அவசியம்
புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி தாக்கப்பட்டு படுகாயம், இருவர் கைது; கம்பளையில் சம்பவம்
புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்கும் மனிதாபிமான பணியில் படையினர்
வன்னி மக்களின் பாதுகாப்பை ஐ.நா.வே உறுதிப்படுத்த வேண்டும்
தோட்டப் பகுதி வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்பது தேர்தல் பிரசாரம்
மாத்தன்னை தோட்டக் குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இழுபறிநிலை; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
ஹல்தும்முல்லை நீட்வூட் பிரிவு தொழிலாளர்களின் பணி நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது
கொட்டியாபுரப்பற்று இந்துசமய அபிவிருத்தி ஒன்றிய ஏற்பாட்டில் ஐந்து நாள் வேல் நடைப்பஜனை
மேல் மாகாண தோட்டப் பாடசாலை அபிவிருத்திக்கு 6 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு
யாழ்ப்பாணத்திற்கான பாடநூல் விநியோக ஆரம்ப வைபவம்
துப்பாக்கி தயாரிக்கும் நிலையம் கண்டுபிடிப்பு
வவுனியா வைத்தியசாலை கட்டிடத் திறப்பு விழா தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் புறக்கணிப்பு
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் யுத்தத்துக்கே பெருமளவு நிதி ஒதுக்க தீர்மானம்
சடலம் அடையாளம் காணப்பட்டது
ஒரு இலட்சம் பீப்பாய் எரிபொருளை சுத்திகரிக்கும் நிலையம் ஈரான் அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்படும்
வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும் அதற்கு செல்வதற்கு பல் வைத்தியர்கள் தயாரில்லை
கிளைமோர் தாக்குதலில் படை வீரர் உயிரிழப்பு
சட்ட உதவி நிலையங்களூடாக வறிய மக்கள் நன்மையடைய முடியும்
குடாநாட்டு பாடசாலைகளுக்கு கப்பல் மூலம் இன்று 6,14,974 பாடப் புத்தகங்கள் அனுப்பப்படுகிறது
கிணற்றில் விழுந்து மாணவன் மரணம்
வலிகாமம் மேற்குப் பிரதேசத்திற்கான பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு
முகாமைத்துவ உதவியாளர் பரீட்சைக்கு தோற்றமுடியாத யாழ். பரீட்சார்த்திகள்
பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த வைத்தியசாலையையும் அபிவிருத்தி செய்யமுடியாது
"ஹெல்பேச்' அரச சார்பற்ற நிறுவனத்தால் பாதிப்புற்றோருக்கு இலவச வைத்தியசேவை
26 வருடங்களாக கைவிடப்பட்ட காணிகளில் மீண்டும் விவசாயம் செய்ய நடவடிக்கை
நாட்டில் உருவாகியுள்ள ஆயுத கலாசாரத்தினால் மக்களுக்கிடையே ஒற்றுமையின்மை அதிகரிப்பு
ஊவா மாகாண சபையின் அதிகாரத்தை எதிர்வரும் தேர்தலிலும் அரசு கைப்பற்றும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com