மட்டக்களப்பு வவுணதீவுப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் விஷேட அதிரடிப் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
வவுணதீவு ஆயித்திமலை பிரதான வீதியில் 3 ஆம் கட்டைப் பகுதியிலேயே நேற்று மாலை 5 மணியளவில் இந்தக் கிளைமோர் தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
அந்தப் பகுதியிலுள்ள விஷேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்தவர்கள் அருகிலுள்ள கிணற்றுக்கு குளிக்கச்சென்ற போதே அவர்கள் மீது இந்தக் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த சுனில் (வயது 33) என்பவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவசர சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதையடுத்து அந்தப் பகுதியில் நீண்ட நேர தேடுதல் நடத்தப்பட்டது.