தென்மராட்சி சரசாலை கப்பூது வெளியில் நேற்று முன்தினம் புதன்கிழமை கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை அவரது உறவினர்கள் இனங்காட்டியுள்ளனர்.
மந்துவில் கிழக்கு, கொடிகமத்தைச் சேர்ந்த கே.தங்கராசா (வயது 52) என்பவரே இவ்வாறு கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
சடலத்தில் பெண்கள் அணியும் கரும்பச்சை நிறச் சாறியும், மென்பச்சை நிறச் சட்டையும் போடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.