Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, September 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் யுத்தத்துக்கே பெருமளவு நிதி ஒதுக்க தீர்மானம்
[05 - September - 2008] [Font Size - A - A - A]
* திறைசேரி செயலாளர்

அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தில் யுத்தத்துக்காக பெருமளவு நிதி ஒதுக்கப்படவிருப்பதாக திறைசேரி செயலாளர் பி.பி.ஜெயசுந்தர தெரிவித்தார்.

நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதனைத் தெரிவித்த ஜெயசுந்தர, அநாவசிய செலவினங்களை தவிர்க்குமாறு அமைச்சருக்கு அறிவுருத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், அடுத்த வருடத்தில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதும், 2010 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், யுத்தத்தால் சேதத்துக்குள்ளான பகுதிகளை மீளக் கட்டியெழுப்பவென பெருமளவு நிதி ஒதுக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய ஜெயசுந்தர மேலும் தெரிவிக்கையில், புதிய வரவு செலவுத்திட்ட அறிக்கை அமைச்சரவையின் ஆலோசனைக்காக முறையாக தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் அரசாங்கம், உமா ஓயா அபிவிருத்தி, நுரைச்சோலை அனல் மின் திட்டம் போன்ற பாரிய அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னுரிமை அடிப்படையில் அவற்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.

தற்போது நடைபெறுகின்ற இந்த யுத்தம் முடிவடைந்ததும், அபிவிருத்தித் திட்டங்கள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படவுள்ளன. சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் போது புதிய நிதியீட்டு வழிமுறைகளை ஆலோசனையாக முன்வைக்குமாறு நான் அமைச்சர்களை கேட்டுக் கொள்கிறேன்.

உள்நாட்டில் பெறப்படும் கடனுக்கான வட்டியுடன் ஒப்பிடும் போது வெளிநாட்டுக் கடனுக்கான வட்டி குறைவாக இருப்பதால், வெளிநாட்டில் இருந்தே கடன்களைப் பெற்று வருகின்றோம்.

இவ்வாறு பெறப்படும் நிதியில் பெருமளவு பணம் அமைச்சுகளுக்கான உத்தியோகத்தர்கள் நியமனம், அவர்களுக்கான சம்பளங்கள், ஓய்வூதியக் கொடுப்பனவுகளுக்காகவே செலவாகின்ற நிலையில் இது சிக்கலான பிரச்சினையாக தொடர்ந்து இருந்து வருகிறது.

பல காரணங்களால் இன்று அபிவிருத்திக்கென உதவியாக கிடைக்கும் நிதி முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. இந்த நிலைமை குறித்து அமைச்சர்கள் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறான திட்டங்கள், நிதி மோசடி வழக்குகளாக நீதிமன்றம் பெற்றுள்ளதையே காணக்கூடியதாக உள்ளது.

தற்போது அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவென 5 பில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ள அதேவேளை குழாய் பொருத்துவதற்கான மற்றொரு திட்டத்திற்காக 5 பில்லியன் ரூபா நிதியும் கிடைத்துள்ளது.

ஏற்கனவே சுகாதார அமைச்சர் தமது அமைச்சுக்கான திட்டத்தை தயாரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
ஐ.ஈ.எல்.ரி.எஸ். பரீட்சைக்கான பதிவுகளை இலகுவாக்கியது பிரிட்டிஷ் கவுன்ஸில்
காணாமற் போனவர்கள் மீண்டும் திரும்பி வருவரென நம்பிக்கை
வன்னி அகதிகளின் நிலைமை; மனித உரிமைகளுக்கான புத்திஜீவிகள் கவலை
வடக்கில் விரைவில் தேர்தலின்பின் மாகாண சபை அரசியல் நிர்வாகம்
வன்னி மக்களின் பாதுகாப்பு, சுதந்திரமான நடமாட்டத்துக்கு இடமளிக்க வலியுறுத்தல் மனிதாபிமான அமைப்புகளின் இணையம் வேண்டுகோள்
யாழ்நகரில் மீண்டும் கொள்ளையர் அட்டகாசம்
மண்சரிவில் புதையுண்ட இரு தொழிலாளர்கள்
கிராண்ட்பாஸ் முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிலைகளை அடித்து நொருக்கி அட்டகாசம்
பணவீக்கம் என்றுமில்லாதவாறு அதிகரிப்பு ஒவ்வொரு பிரஜையும் ரூபா 1,75,000 கடனாளி
இந்துக் கோவில் சுவாமி சிலைகளை உடைத்த பிக்கு மீது ஜனாதிபதி, அஸ்கிரிய பீடாதிபதிகளின் நடவடிக்கை அவசியம்
புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி தாக்கப்பட்டு படுகாயம், இருவர் கைது; கம்பளையில் சம்பவம்
புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்கும் மனிதாபிமான பணியில் படையினர்
வன்னி மக்களின் பாதுகாப்பை ஐ.நா.வே உறுதிப்படுத்த வேண்டும்
தோட்டப் பகுதி வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்பது தேர்தல் பிரசாரம்
மாத்தன்னை தோட்டக் குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இழுபறிநிலை; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
ஹல்தும்முல்லை நீட்வூட் பிரிவு தொழிலாளர்களின் பணி நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது
கொட்டியாபுரப்பற்று இந்துசமய அபிவிருத்தி ஒன்றிய ஏற்பாட்டில் ஐந்து நாள் வேல் நடைப்பஜனை
மேல் மாகாண தோட்டப் பாடசாலை அபிவிருத்திக்கு 6 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு
யாழ்ப்பாணத்திற்கான பாடநூல் விநியோக ஆரம்ப வைபவம்
துப்பாக்கி தயாரிக்கும் நிலையம் கண்டுபிடிப்பு
வவுனியா வைத்தியசாலை கட்டிடத் திறப்பு விழா தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் புறக்கணிப்பு
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் யுத்தத்துக்கே பெருமளவு நிதி ஒதுக்க தீர்மானம்
சடலம் அடையாளம் காணப்பட்டது
ஒரு இலட்சம் பீப்பாய் எரிபொருளை சுத்திகரிக்கும் நிலையம் ஈரான் அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்படும்
வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும் அதற்கு செல்வதற்கு பல் வைத்தியர்கள் தயாரில்லை
கிளைமோர் தாக்குதலில் படை வீரர் உயிரிழப்பு
சட்ட உதவி நிலையங்களூடாக வறிய மக்கள் நன்மையடைய முடியும்
குடாநாட்டு பாடசாலைகளுக்கு கப்பல் மூலம் இன்று 6,14,974 பாடப் புத்தகங்கள் அனுப்பப்படுகிறது
கிணற்றில் விழுந்து மாணவன் மரணம்
வலிகாமம் மேற்குப் பிரதேசத்திற்கான பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு
முகாமைத்துவ உதவியாளர் பரீட்சைக்கு தோற்றமுடியாத யாழ். பரீட்சார்த்திகள்
பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த வைத்தியசாலையையும் அபிவிருத்தி செய்யமுடியாது
"ஹெல்பேச்' அரச சார்பற்ற நிறுவனத்தால் பாதிப்புற்றோருக்கு இலவச வைத்தியசேவை
26 வருடங்களாக கைவிடப்பட்ட காணிகளில் மீண்டும் விவசாயம் செய்ய நடவடிக்கை
நாட்டில் உருவாகியுள்ள ஆயுத கலாசாரத்தினால் மக்களுக்கிடையே ஒற்றுமையின்மை அதிகரிப்பு
ஊவா மாகாண சபையின் அதிகாரத்தை எதிர்வரும் தேர்தலிலும் அரசு கைப்பற்றும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com