Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, September 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
வவுனியா வைத்தியசாலை கட்டிடத் திறப்பு விழா தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் புறக்கணிப்பு
[05 - September - 2008] [Font Size - A - A - A]
வவுனியா பொதுவைத்தியசாலைக்கான புதிய கட்டிடத் தொகுதி திறப்பு விழாவில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு திட்டமிடப்பட்ட வகையில் அழைப்பு விடுக்கப்படாமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு, சிகிச்சைப் பிரிவுகளுக்கான கட்டிடத் தொகுதி திறப்பு விழா நாளை 6 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறுகின்றது.

வடமாகாண ஆளுநர் விக்டர் பெரேராவின் அழைப்பின் பேரில் அனர்த்த நிவாரண சேவைகள் மீள் குடியேற்ற அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ ஆகியோர் இக்கட்டிடத் தொகுதியைத் திறந்து வைக்கவுள்ளனர்.

எனினும், வன்னி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் திட்டமிட்ட வகையில் இந்நிகழ்வில் கலந்து கொள்ளாதவாறு புறுக்கணிக்கப்பட்டுள்ளனர்.

சாதாரண சிறிய விடயங்களில் கூட தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழத் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை ஓரங்கட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை ஒரு போதும் வழங்காது என்பதையே தொடரும் ஒவ்வொரு சம்பவங்களும் தெளிவுபடுத்துகிறது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம், சிவநாதன் கிஷோர், ரி.கனகரட்ணம் ஆகியோர் தமது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்துள்ளனர்.

Email this page Your Opinion Print this page
ஐ.ஈ.எல்.ரி.எஸ். பரீட்சைக்கான பதிவுகளை இலகுவாக்கியது பிரிட்டிஷ் கவுன்ஸில்
காணாமற் போனவர்கள் மீண்டும் திரும்பி வருவரென நம்பிக்கை
வன்னி அகதிகளின் நிலைமை; மனித உரிமைகளுக்கான புத்திஜீவிகள் கவலை
வடக்கில் விரைவில் தேர்தலின்பின் மாகாண சபை அரசியல் நிர்வாகம்
வன்னி மக்களின் பாதுகாப்பு, சுதந்திரமான நடமாட்டத்துக்கு இடமளிக்க வலியுறுத்தல் மனிதாபிமான அமைப்புகளின் இணையம் வேண்டுகோள்
யாழ்நகரில் மீண்டும் கொள்ளையர் அட்டகாசம்
மண்சரிவில் புதையுண்ட இரு தொழிலாளர்கள்
கிராண்ட்பாஸ் முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிலைகளை அடித்து நொருக்கி அட்டகாசம்
பணவீக்கம் என்றுமில்லாதவாறு அதிகரிப்பு ஒவ்வொரு பிரஜையும் ரூபா 1,75,000 கடனாளி
இந்துக் கோவில் சுவாமி சிலைகளை உடைத்த பிக்கு மீது ஜனாதிபதி, அஸ்கிரிய பீடாதிபதிகளின் நடவடிக்கை அவசியம்
புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி தாக்கப்பட்டு படுகாயம், இருவர் கைது; கம்பளையில் சம்பவம்
புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்கும் மனிதாபிமான பணியில் படையினர்
வன்னி மக்களின் பாதுகாப்பை ஐ.நா.வே உறுதிப்படுத்த வேண்டும்
தோட்டப் பகுதி வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்பது தேர்தல் பிரசாரம்
மாத்தன்னை தோட்டக் குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இழுபறிநிலை; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
ஹல்தும்முல்லை நீட்வூட் பிரிவு தொழிலாளர்களின் பணி நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது
கொட்டியாபுரப்பற்று இந்துசமய அபிவிருத்தி ஒன்றிய ஏற்பாட்டில் ஐந்து நாள் வேல் நடைப்பஜனை
மேல் மாகாண தோட்டப் பாடசாலை அபிவிருத்திக்கு 6 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு
யாழ்ப்பாணத்திற்கான பாடநூல் விநியோக ஆரம்ப வைபவம்
துப்பாக்கி தயாரிக்கும் நிலையம் கண்டுபிடிப்பு
வவுனியா வைத்தியசாலை கட்டிடத் திறப்பு விழா தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் புறக்கணிப்பு
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் யுத்தத்துக்கே பெருமளவு நிதி ஒதுக்க தீர்மானம்
சடலம் அடையாளம் காணப்பட்டது
ஒரு இலட்சம் பீப்பாய் எரிபொருளை சுத்திகரிக்கும் நிலையம் ஈரான் அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்படும்
வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும் அதற்கு செல்வதற்கு பல் வைத்தியர்கள் தயாரில்லை
கிளைமோர் தாக்குதலில் படை வீரர் உயிரிழப்பு
சட்ட உதவி நிலையங்களூடாக வறிய மக்கள் நன்மையடைய முடியும்
குடாநாட்டு பாடசாலைகளுக்கு கப்பல் மூலம் இன்று 6,14,974 பாடப் புத்தகங்கள் அனுப்பப்படுகிறது
கிணற்றில் விழுந்து மாணவன் மரணம்
வலிகாமம் மேற்குப் பிரதேசத்திற்கான பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு
முகாமைத்துவ உதவியாளர் பரீட்சைக்கு தோற்றமுடியாத யாழ். பரீட்சார்த்திகள்
பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த வைத்தியசாலையையும் அபிவிருத்தி செய்யமுடியாது
"ஹெல்பேச்' அரச சார்பற்ற நிறுவனத்தால் பாதிப்புற்றோருக்கு இலவச வைத்தியசேவை
26 வருடங்களாக கைவிடப்பட்ட காணிகளில் மீண்டும் விவசாயம் செய்ய நடவடிக்கை
நாட்டில் உருவாகியுள்ள ஆயுத கலாசாரத்தினால் மக்களுக்கிடையே ஒற்றுமையின்மை அதிகரிப்பு
ஊவா மாகாண சபையின் அதிகாரத்தை எதிர்வரும் தேர்தலிலும் அரசு கைப்பற்றும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com