பெலியத்தை குவத்தண்டாவ பகுதியில் விஸ்கம்புர என்ற இடத்தில் நீண்டகாலமாக உள்ளூர் துப்பாக்கிகளை தயாரித்துவந்த இரும்புத் தொழில் பட்டறையை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
இந்தப் பட்டறையில் கத்தி போன்ற ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன எனவும் அத்துடன் துப்பாக்கிகளை தயாரித்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இங்கிருந்து உள்ளூர் துப்பாக்கிகள் சிலவும் ரி.56 ரக ரவைகள், இரு உள்ளூர் கைத்துப்பாக்கிகள், துப்பாக்கி தயாரிக்க உதவும் இரும்பு பகுதிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
இச்சம்பவம் குறித்து விசாரணை செய்துவரும் தங்காலை பொலிஸார் மூவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
பல கொள்ளையர்கள் இங்கிருந்து உள்ளூர் துப்பாக்கிகளைப் பெற்று வந்ததாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.