|
2009 ஆம் ஆண்டிற்கான பாடசாலை பாடநூல்களை வடமாகாண பிரதேசங்களுக்கு கப்பல் மூலமாக அனுப்பும் ஆரம்ப வைபவம் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொழும்பு துறைமுகத்தின் பண்டாரநாயக்க இறங்கு துறையில் நடைபெறவுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்தவின் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்விற்கு பிரதிக் கல்வி அமைச்சர் எம்.சச்சிதானந்தன், சமூக சேவைகள் மற்றும் நலன்புரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்விச் சேவைகள் அமைச்சர் நிர்மல கொத்தலாவல, துறைமுக அபிவிருத்தி அமைச்சர் டிலான் பெரேரா ஆகியோர் பங்கேற்று உரையாடவுள்ளதுடன், முற்பகல் 11.45 மணியளவில் பாடநூல்களை கப்பலில் ஏற்றுதல் தொடர்பான ஆரம்ப செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன. |