Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, September 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தோட்டப் பகுதி வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்பது தேர்தல் பிரசாரம்
[05 - September - 2008] [Font Size - A - A - A]
* சாடுகிறது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம்

-ரொஷான் நாகலிங்கம்-

அரசாங்கம் தோட்டப் பகுதி வைத்தியசாலைகளை அரச வைத்தியசாலைகளாக பெயரளவிற்கு மாத்திரம் மாற்றாமல் தோட்ட மக்களுக்கு சிறந்த சேவையை பெற்றுக்கொடுக்கும் வைத்தியசாலைகளாக மாற்ற வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் கோரியுள்ளது.

அத்துடன், இதனை தேர்தல் பிர சாரத்துக்கு பயன்படுத்தாமல் ஆரோக்கியமான பெருந்தோட்ட சமூகத்தை உருவாக்க முன்வர வேண்டுமெனவும் கோரியுள்ளது.

இது தொடர்பில் கொழும்பு தேசிய நூலகத்தில் நேற்று வியாழக்கிழமை இச்சங்கம் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அதன் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;

பெருந்தோட்டப் பகுதிகளின் சுகாதார நிலைமை மோசமான பாதிப்பினை எதிர்கொண்டு வருகின்றது. இது விடயத்தில் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளது. இதற்குக் காரணம் அங்குள்ள தோட்ட வைத்தியசாலைகளில் மனித வளம் உட்பட அனைத்து வளங்களும் பற்றாக்குறையாகவுள்ளமையாகும்.

ஆரோக்கியமான மனித சமூகத்தை கட்டியெழுப்புவதே சுகாதார துறையின் குறிக்கோளாகவுள்ள நிலையில் பெருந்தோட்ட சமூகம் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக இது விடயத்தில் கவனிப்பாரற்றே இருந்து வந்துள்ளது. இதனால் நாட்டின் இறப்பு வீதம் 5.9 ஆகவுள்ள நிலையில் தோட்டப் பகுதியில் இது 4.8 ஆகும். இதேபோல், பிரசவத்தின் போது தாய் இறப்பு விகிதம் தோட்டப் பகுதியில் 4.5 ஆகவுள்ள நிலையில் நாட்டில் 2.3 ஆகவுள்ளது.

இது நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது மிக உயர்வாகவுள்ளது. இதே நிலைமை குழந்தைகள் இறப்பு வீதம் மற்றும் எடை குறைந்த வளர்ச்சி குன்றிய பிறப்பு வீதத்திலும் காணப்படுகின்றது. குறிப்பாக பெருந்தோட்டப் பகுதியில் குருதிச்சோகையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இது 20 வயதுக்கும் 45 வயதுக்குமிடைப்பட்ட பெண்கள் 35%மாகும். அதேபோல் 9 மாத சிசுவுக்கும் 6 வயதுக்குமுட்பட்ட பிள்ளைகளில் 42% மாகவும் காணப்படுகின்றது.

பெருந்தோட்டப் பகுதி சுகாதாரத்தை மேம்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தேர்தலின்போது குறிப்பிட்டுள்ளதுடன் தனது மகிந்த சிந்தனையிலும் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலைமையில் தற்போது தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்கின்றது.

அரசாங்கம் தோட்ட வைத்தியசாலையை அரசவைத்தியசாலையாக பெயரளவில் மாற்றாமல் ஒரு வைத்தியசாலைக்கு தேவையான அனைத்து வளங்களையும் பெற்றுக்கொடுத்து உரியமுறையில் செயற்பட வழிவகுக்க வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகவுள்ளது. இதை விடுத்து ஏமாற்றும் வகையில் செயற்பட வேண்டாமென்பதே எமது கோரிக்கையாகவுள்ளது.

முதல் கட்டமாக அரசாங்கம் இரத்தினபுரியில் கடந்த மாதம் தோட்ட வைத்தியசாலைகளை பொறுப்பேற்றது. இதற்குக் காரணம் சப்ரகமுவ மாகாண சபை தேர்தலாகும். இப்போது ஊவா மாகாணத்தில் 12 வைத்தியசாலைகளை பொறுப்பேற்றுள்ளது. தற்போது மாகாண சபைகள் கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறவுள்ளதாக பேசப்படும் நிலையிலேயே இங்கு அரசு பொறுப்பேற்றுள்ளது.

அரசாங்கம் தேர்தல் பிரசாரத்துக்கு தோட்ட வைத்தியசாலைகளை பொறுப்பேற்காமல் நாட்டின் பொருளாதாரத்துக்கு 180 வருடங்களாக உழைக்கும் 15 வீத சீரான வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் தொழிலாளர்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தேவையான வளங்களை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதே எமது வேண்டுகோளாகும் என்றார்.

Email this page Your Opinion Print this page
ஐ.ஈ.எல்.ரி.எஸ். பரீட்சைக்கான பதிவுகளை இலகுவாக்கியது பிரிட்டிஷ் கவுன்ஸில்
காணாமற் போனவர்கள் மீண்டும் திரும்பி வருவரென நம்பிக்கை
வன்னி அகதிகளின் நிலைமை; மனித உரிமைகளுக்கான புத்திஜீவிகள் கவலை
வடக்கில் விரைவில் தேர்தலின்பின் மாகாண சபை அரசியல் நிர்வாகம்
வன்னி மக்களின் பாதுகாப்பு, சுதந்திரமான நடமாட்டத்துக்கு இடமளிக்க வலியுறுத்தல் மனிதாபிமான அமைப்புகளின் இணையம் வேண்டுகோள்
யாழ்நகரில் மீண்டும் கொள்ளையர் அட்டகாசம்
மண்சரிவில் புதையுண்ட இரு தொழிலாளர்கள்
கிராண்ட்பாஸ் முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிலைகளை அடித்து நொருக்கி அட்டகாசம்
பணவீக்கம் என்றுமில்லாதவாறு அதிகரிப்பு ஒவ்வொரு பிரஜையும் ரூபா 1,75,000 கடனாளி
இந்துக் கோவில் சுவாமி சிலைகளை உடைத்த பிக்கு மீது ஜனாதிபதி, அஸ்கிரிய பீடாதிபதிகளின் நடவடிக்கை அவசியம்
புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி தாக்கப்பட்டு படுகாயம், இருவர் கைது; கம்பளையில் சம்பவம்
புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்கும் மனிதாபிமான பணியில் படையினர்
வன்னி மக்களின் பாதுகாப்பை ஐ.நா.வே உறுதிப்படுத்த வேண்டும்
தோட்டப் பகுதி வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்பது தேர்தல் பிரசாரம்
மாத்தன்னை தோட்டக் குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இழுபறிநிலை; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
ஹல்தும்முல்லை நீட்வூட் பிரிவு தொழிலாளர்களின் பணி நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது
கொட்டியாபுரப்பற்று இந்துசமய அபிவிருத்தி ஒன்றிய ஏற்பாட்டில் ஐந்து நாள் வேல் நடைப்பஜனை
மேல் மாகாண தோட்டப் பாடசாலை அபிவிருத்திக்கு 6 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு
யாழ்ப்பாணத்திற்கான பாடநூல் விநியோக ஆரம்ப வைபவம்
துப்பாக்கி தயாரிக்கும் நிலையம் கண்டுபிடிப்பு
வவுனியா வைத்தியசாலை கட்டிடத் திறப்பு விழா தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் புறக்கணிப்பு
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் யுத்தத்துக்கே பெருமளவு நிதி ஒதுக்க தீர்மானம்
சடலம் அடையாளம் காணப்பட்டது
ஒரு இலட்சம் பீப்பாய் எரிபொருளை சுத்திகரிக்கும் நிலையம் ஈரான் அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்படும்
வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும் அதற்கு செல்வதற்கு பல் வைத்தியர்கள் தயாரில்லை
கிளைமோர் தாக்குதலில் படை வீரர் உயிரிழப்பு
சட்ட உதவி நிலையங்களூடாக வறிய மக்கள் நன்மையடைய முடியும்
குடாநாட்டு பாடசாலைகளுக்கு கப்பல் மூலம் இன்று 6,14,974 பாடப் புத்தகங்கள் அனுப்பப்படுகிறது
கிணற்றில் விழுந்து மாணவன் மரணம்
வலிகாமம் மேற்குப் பிரதேசத்திற்கான பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு
முகாமைத்துவ உதவியாளர் பரீட்சைக்கு தோற்றமுடியாத யாழ். பரீட்சார்த்திகள்
பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த வைத்தியசாலையையும் அபிவிருத்தி செய்யமுடியாது
"ஹெல்பேச்' அரச சார்பற்ற நிறுவனத்தால் பாதிப்புற்றோருக்கு இலவச வைத்தியசேவை
26 வருடங்களாக கைவிடப்பட்ட காணிகளில் மீண்டும் விவசாயம் செய்ய நடவடிக்கை
நாட்டில் உருவாகியுள்ள ஆயுத கலாசாரத்தினால் மக்களுக்கிடையே ஒற்றுமையின்மை அதிகரிப்பு
ஊவா மாகாண சபையின் அதிகாரத்தை எதிர்வரும் தேர்தலிலும் அரசு கைப்பற்றும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com