Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, September 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
வன்னி மக்களின் பாதுகாப்பை ஐ.நா.வே உறுதிப்படுத்த வேண்டும்
[05 - September - 2008] [Font Size - A - A - A]
* தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை

வன்னி மக்களின் பாதுகாப்பை ஐ.நா.உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இலங்கை அரசு மீது தமிழ் மக்களுக்கு எவ்வித நம்பிக்கையுமில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அகதிகளுக்கான ஐ.நா.உயர் ஸ்தானிகராலயத்தின் யு.என்.எச்.சி.ஆர்.இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி நீல்புகுனியை நேற்று வியாழக்கிழமை மாலை சந்தித்த போதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இவ்வாறு வலியுறுத்தியுள்ளது.

நேற்றுமாலை 5.30 மணி முதல் 6.30 மணிவரை ஐ.நா.உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் அதன் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பின் போது, வன்னிமக்களின் தற்போதைய அவலநிலை குறித்து வதிவிடப் பிரதிநிதிக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் விரிவாக விளக்கினர்.

அவர்கள் வன்னிமக்களின் நிலைமை தொடர்பாக கூறுகையில்,

வன்னியில் 2 இலட்சம் மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்குவதற்கு இடமின்றி மரங்களுக்கு கீழும் காடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். உண்ண உணவின்றி பட்டினியால் வாடுகின்றனர். சுகாதார வசதிகளோ, உதவிகளோ அவர்களுக்கு கிடைப்பதில்லை.

வன்னி மக்களின் பாதுகாப்பை ஐ.நா.வே உறுதிப்படுத்த வேண்டும். இலங்கை அரசு வன்னி மக்களுக்கு எந்தவித உதவிகளையும் செய்யவில்லை. செய்யப் போவதுமில்லை. அத்துடன் இலங்கையரசு மீது தமிழ் மக்களுக்கு நம்பிக்கையுமில்லை.

விமானத்தாக்குதல்கள், ஷெல்தாக்குதல்கள், பல்குழல் ரொக்கட் தாக்குதல்களால் மக்கள் கொல்லப்படுகின்றனர். அவர்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் அவர்கள் அகதிகளாக அலைகின்றனர்.

வன்னியில் அனைத்து நடவடிக்கைகளும் செயலிழக்கும் நிலைக்கு வந்துள்ளன. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பல பாடசாலைகள் அகதிமுகாம்களாகமாறியுள்ளன. எனவே இது விடயத்தில் ஐ.நா.உடனடி நடவடிக்கையெடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்த வதிவிடப் பிரதிநிதி நீல்புகுனி,

வன்னியில் இடம் பெயர்ந்த மக்களுக்கு தேவையான உணவு, மருந்து, தங்குமிடவசதிகளை செய்ய நாம் எவ்வேளையிலும் தயாராகவேயுள்ளோம்.

வன்னியில் ஒன்றரை லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாக எமக்கு புள்ளி விபரங்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பில் நாம் எமது தலைமையகத்துக்கும் தெரியப்படுத்தியுள்ளோம். இது குறித்து நாம் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என்று கூறினார்.

தான் கிளிநொச்சிக்கு நேரில் சென்று அகதிகளின் நிலைமை குறித்து அவதானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
ஐ.ஈ.எல்.ரி.எஸ். பரீட்சைக்கான பதிவுகளை இலகுவாக்கியது பிரிட்டிஷ் கவுன்ஸில்
காணாமற் போனவர்கள் மீண்டும் திரும்பி வருவரென நம்பிக்கை
வன்னி அகதிகளின் நிலைமை; மனித உரிமைகளுக்கான புத்திஜீவிகள் கவலை
வடக்கில் விரைவில் தேர்தலின்பின் மாகாண சபை அரசியல் நிர்வாகம்
வன்னி மக்களின் பாதுகாப்பு, சுதந்திரமான நடமாட்டத்துக்கு இடமளிக்க வலியுறுத்தல் மனிதாபிமான அமைப்புகளின் இணையம் வேண்டுகோள்
யாழ்நகரில் மீண்டும் கொள்ளையர் அட்டகாசம்
மண்சரிவில் புதையுண்ட இரு தொழிலாளர்கள்
கிராண்ட்பாஸ் முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிலைகளை அடித்து நொருக்கி அட்டகாசம்
பணவீக்கம் என்றுமில்லாதவாறு அதிகரிப்பு ஒவ்வொரு பிரஜையும் ரூபா 1,75,000 கடனாளி
இந்துக் கோவில் சுவாமி சிலைகளை உடைத்த பிக்கு மீது ஜனாதிபதி, அஸ்கிரிய பீடாதிபதிகளின் நடவடிக்கை அவசியம்
புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி தாக்கப்பட்டு படுகாயம், இருவர் கைது; கம்பளையில் சம்பவம்
புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்கும் மனிதாபிமான பணியில் படையினர்
வன்னி மக்களின் பாதுகாப்பை ஐ.நா.வே உறுதிப்படுத்த வேண்டும்
தோட்டப் பகுதி வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்பது தேர்தல் பிரசாரம்
மாத்தன்னை தோட்டக் குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இழுபறிநிலை; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
ஹல்தும்முல்லை நீட்வூட் பிரிவு தொழிலாளர்களின் பணி நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது
கொட்டியாபுரப்பற்று இந்துசமய அபிவிருத்தி ஒன்றிய ஏற்பாட்டில் ஐந்து நாள் வேல் நடைப்பஜனை
மேல் மாகாண தோட்டப் பாடசாலை அபிவிருத்திக்கு 6 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு
யாழ்ப்பாணத்திற்கான பாடநூல் விநியோக ஆரம்ப வைபவம்
துப்பாக்கி தயாரிக்கும் நிலையம் கண்டுபிடிப்பு
வவுனியா வைத்தியசாலை கட்டிடத் திறப்பு விழா தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் புறக்கணிப்பு
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் யுத்தத்துக்கே பெருமளவு நிதி ஒதுக்க தீர்மானம்
சடலம் அடையாளம் காணப்பட்டது
ஒரு இலட்சம் பீப்பாய் எரிபொருளை சுத்திகரிக்கும் நிலையம் ஈரான் அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்படும்
வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும் அதற்கு செல்வதற்கு பல் வைத்தியர்கள் தயாரில்லை
கிளைமோர் தாக்குதலில் படை வீரர் உயிரிழப்பு
சட்ட உதவி நிலையங்களூடாக வறிய மக்கள் நன்மையடைய முடியும்
குடாநாட்டு பாடசாலைகளுக்கு கப்பல் மூலம் இன்று 6,14,974 பாடப் புத்தகங்கள் அனுப்பப்படுகிறது
கிணற்றில் விழுந்து மாணவன் மரணம்
வலிகாமம் மேற்குப் பிரதேசத்திற்கான பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு
முகாமைத்துவ உதவியாளர் பரீட்சைக்கு தோற்றமுடியாத யாழ். பரீட்சார்த்திகள்
பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த வைத்தியசாலையையும் அபிவிருத்தி செய்யமுடியாது
"ஹெல்பேச்' அரச சார்பற்ற நிறுவனத்தால் பாதிப்புற்றோருக்கு இலவச வைத்தியசேவை
26 வருடங்களாக கைவிடப்பட்ட காணிகளில் மீண்டும் விவசாயம் செய்ய நடவடிக்கை
நாட்டில் உருவாகியுள்ள ஆயுத கலாசாரத்தினால் மக்களுக்கிடையே ஒற்றுமையின்மை அதிகரிப்பு
ஊவா மாகாண சபையின் அதிகாரத்தை எதிர்வரும் தேர்தலிலும் அரசு கைப்பற்றும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com