Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, September 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்கும் மனிதாபிமான பணியில் படையினர்
[05 - September - 2008] [Font Size - A - A - A]
* அரசாங்கம் அறிவிப்பு

-எம்.ஏ.எம். நிலாம்-

வடக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் சிக்கியிருக்கும் அப்பாவித் தமிழ் மக்களை அவர்களின் பிடியிலிருந்து மீட்டெடுக்கும் மனிதாபிமான நட வடிக்கைகளில் பாதுகாப்புத் தரப்பு தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்திருக்கும் அரசாங்கம், புலிகள் கேடயமாகப் பயன்படுத்தும் அப்பாவி மக்களை ஏதோவொரு மார்க்கத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு அழைத்து வருமாறு ஜனாதிபதி படைத்தரப்புக்கு பணிப்புரை விடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டது.

அரசாங்கத் தகவல் திணைக்களக் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்தச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் தகவல் ஊடக அமைச்சர் அநுர பிரியதர்ஷண யாப்பா மேற்கண்டவாறு தகவலை வெளியிட்டார்.இது தொடர்பாக மேலும் விளக்கமளித்த அமைச்சர் அநுர பிரியதர்ஷண யாப்பா கூறியதாவது;

""ஜனாதிபதி விடுத்த உத்தரவுக்கமைய இராணுவத்தினர் வடக்கில் மனிதாபிமான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. வடபகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மனிதக் கேடயங்களாக சிக்கியிருக்கும் அப்பாவி மக்களை உடனடியாக மீட்டெடுத்து அரசாங்க சிவில் நிருவாக பகுதிக்குள் கொண்டு வந்து அந்த மக்கள் அச்சமின்றி இயல்பு வாழ்க்கையை மேற்கொள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ படையினருக்குப் பணிப்புரை விடுத்திருந்தார்.

அதற்கமைய படையினர் வடபகுதியில் புலிகளிடம் சிக்கியுள்ள சகல மக்களையும் மாற்று வழியொன்றின் மூலம் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அழைத்து வருவது குறித்து படைத் தரப்பு தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.

ஆரம்ப நடவடிக்கையாக படையினர் பெருந்தொகையான துண்டுப் பிரசுரங்களை அப்பகுதியில் விமானமூலம் வீசியுள்ளனர். புலிகள் பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாதவாறு அவர்களைக்காப்பாற்றும் ஒரு வியூகத்தை கையாள்வதில் படைத்தரப்பு கவனம் செலுத்தி வருகின்றது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான படைநடவடிக்கைகளால் அப்பாவி மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வதில் படையினர் கவனமாக இருக்கின்றனர். புலிகளின் இலக்குகளை மட்டுமே குறிவைத்து தாக்குதல்களை படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இவற்றுக்குள் அப்பாவி மக்கள் சிக்கி விடாமலிருப்பதில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டுமென பாதுகாப்பு அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

Email this page Your Opinion Print this page
ஐ.ஈ.எல்.ரி.எஸ். பரீட்சைக்கான பதிவுகளை இலகுவாக்கியது பிரிட்டிஷ் கவுன்ஸில்
காணாமற் போனவர்கள் மீண்டும் திரும்பி வருவரென நம்பிக்கை
வன்னி அகதிகளின் நிலைமை; மனித உரிமைகளுக்கான புத்திஜீவிகள் கவலை
வடக்கில் விரைவில் தேர்தலின்பின் மாகாண சபை அரசியல் நிர்வாகம்
வன்னி மக்களின் பாதுகாப்பு, சுதந்திரமான நடமாட்டத்துக்கு இடமளிக்க வலியுறுத்தல் மனிதாபிமான அமைப்புகளின் இணையம் வேண்டுகோள்
யாழ்நகரில் மீண்டும் கொள்ளையர் அட்டகாசம்
மண்சரிவில் புதையுண்ட இரு தொழிலாளர்கள்
கிராண்ட்பாஸ் முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிலைகளை அடித்து நொருக்கி அட்டகாசம்
பணவீக்கம் என்றுமில்லாதவாறு அதிகரிப்பு ஒவ்வொரு பிரஜையும் ரூபா 1,75,000 கடனாளி
இந்துக் கோவில் சுவாமி சிலைகளை உடைத்த பிக்கு மீது ஜனாதிபதி, அஸ்கிரிய பீடாதிபதிகளின் நடவடிக்கை அவசியம்
புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி தாக்கப்பட்டு படுகாயம், இருவர் கைது; கம்பளையில் சம்பவம்
புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்கும் மனிதாபிமான பணியில் படையினர்
வன்னி மக்களின் பாதுகாப்பை ஐ.நா.வே உறுதிப்படுத்த வேண்டும்
தோட்டப் பகுதி வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்பது தேர்தல் பிரசாரம்
மாத்தன்னை தோட்டக் குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இழுபறிநிலை; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
ஹல்தும்முல்லை நீட்வூட் பிரிவு தொழிலாளர்களின் பணி நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது
கொட்டியாபுரப்பற்று இந்துசமய அபிவிருத்தி ஒன்றிய ஏற்பாட்டில் ஐந்து நாள் வேல் நடைப்பஜனை
மேல் மாகாண தோட்டப் பாடசாலை அபிவிருத்திக்கு 6 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு
யாழ்ப்பாணத்திற்கான பாடநூல் விநியோக ஆரம்ப வைபவம்
துப்பாக்கி தயாரிக்கும் நிலையம் கண்டுபிடிப்பு
வவுனியா வைத்தியசாலை கட்டிடத் திறப்பு விழா தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் புறக்கணிப்பு
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் யுத்தத்துக்கே பெருமளவு நிதி ஒதுக்க தீர்மானம்
சடலம் அடையாளம் காணப்பட்டது
ஒரு இலட்சம் பீப்பாய் எரிபொருளை சுத்திகரிக்கும் நிலையம் ஈரான் அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்படும்
வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும் அதற்கு செல்வதற்கு பல் வைத்தியர்கள் தயாரில்லை
கிளைமோர் தாக்குதலில் படை வீரர் உயிரிழப்பு
சட்ட உதவி நிலையங்களூடாக வறிய மக்கள் நன்மையடைய முடியும்
குடாநாட்டு பாடசாலைகளுக்கு கப்பல் மூலம் இன்று 6,14,974 பாடப் புத்தகங்கள் அனுப்பப்படுகிறது
கிணற்றில் விழுந்து மாணவன் மரணம்
வலிகாமம் மேற்குப் பிரதேசத்திற்கான பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு
முகாமைத்துவ உதவியாளர் பரீட்சைக்கு தோற்றமுடியாத யாழ். பரீட்சார்த்திகள்
பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த வைத்தியசாலையையும் அபிவிருத்தி செய்யமுடியாது
"ஹெல்பேச்' அரச சார்பற்ற நிறுவனத்தால் பாதிப்புற்றோருக்கு இலவச வைத்தியசேவை
26 வருடங்களாக கைவிடப்பட்ட காணிகளில் மீண்டும் விவசாயம் செய்ய நடவடிக்கை
நாட்டில் உருவாகியுள்ள ஆயுத கலாசாரத்தினால் மக்களுக்கிடையே ஒற்றுமையின்மை அதிகரிப்பு
ஊவா மாகாண சபையின் அதிகாரத்தை எதிர்வரும் தேர்தலிலும் அரசு கைப்பற்றும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com