கம்பளை புகையிரத நிலைய பொறுப்பதிகாரி, மூவர் கொண்ட குழுவினரால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை அதிகாலை 2.15 அளவில் இடம் பெற்ற இச்சம்பவத்தில் என். பண்டார என்பவரே தாக்கப்பட்டு படு காயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புகையிரத நிலையத்தில் புகைப்பிடிக்க வேண்டாமென இளைஞர் ஒருவருக்கு அறிவுறுத்தியதன் பேரிலேயே இவர் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் விடுதி முகாமையாளர் உட்பட இருவரை கம்பளை பெலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தினால் பதுளைகொழும்புக்கான ரயில் போக்குவரத்து மூன்று மணித்தியாலம் தாமதம் ஏற்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸ் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ரஞ்சித் கஸ்தூரிரட்னவின் பணிப்புரையின் பேரில் பொலிஸ் பொறுப்பதிகாரி ஜாலிய ஹீன் கந்த மேற்கொண்டு வருகிறார்.